விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் சாதிச் சான்றிதழ் கேட்டு போராட்டம் நடத்திய மாணவனை தாக்கிய சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் கணபதியை சஸ்பெண்ட் செய்து டிஐஜி பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம்  அருகே உள்ள  கோலியனூர்  பகுதியை  சேர்ந்தவர் ஆனந்தன்  மகன் மகேந்திரா (20). இவர் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. இயற்பியல் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். தனக்கு சாதி சான்றிதழ் வழங்கும்படி கேட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் மோகனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். மனுவை பெற்ற கலெக்டர் மோகன், மாணவர் மகேந்திராவுக்கு 31.12.2021-க்குள் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி விழுப்புரம் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.


”முதல்வர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்” - சாமி தரிசனத்திற்கு பின் செல்லூர் கே.ராஜூ பேட்டி


இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் பெறுவதற்காக மாணவர் மகேந்திரா காத்திருந்தார். பல மணி நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் எந்த பதிலும் கூறவில்லை என தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணவர் மகேந்திரா இரவு 10 மணியளவில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு தனிநபராக அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


 Madurai Taste | பர்மா இடியாப்பம்.. அவித்த காய்கறி குருமா.. இறைச்சி க்ரேவி.. மதுரையில் இப்படி ஒரு Foodie சொர்க்கம்


இதையறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவர் மகேந்திராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறுநாள் காலை கலெக்டர் அலுவலகத்தில் நேரில் வந்து முறையிடும்படி கூறினர். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாமல் மாணவர் மகேந்திரா தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே அவரை வலுக்கட்டாயமாக போலீசார் தூக்கிச்சென்று அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது அந்த மாணவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் சமூகவலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில்  போராட்டம் நடத்திய மாணவனை தாக்கிய சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கணபதியை சஸ்பெண்ட் செய்து டிஐஜி பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.


 


Also Read | Today Headlines: பிரதமருக்கு முதல்வர் கடிதம்... மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு அங்கீகாரம்... ஜார்க்கண்ட் பெட்ரோல்... இன்னும் பல!