தமிழ்நாடு:



  • வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசு தமிழ்நாடுக்கு 6,230 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  • 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவின் தலைமையை ஏற்பவர்களுடன் கூட்டணி அமைக்கப்படுமென அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்

  • சென்னையில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், விளம்பர பதாகைகள், சுவரொட்டிகளை கட்டுமானத்துடன் அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

  • சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செயல்பட்டுவரும் மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்திருக்கிறது.


இந்தியா:



  • அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சந்திக்கிறார்.

  • தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே மற்றும் அவரது மருமகன் சதானந்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • ஜார்க்கண்ட்டில் இரண்டு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 25 குறைக்கப்பட்டுள்ளது.

  • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி இத்தாலிக்கு சென்றார்


உலகம்:



  • கொரோனா தொற்று உலகளவில் கடந்த வாரம் 11 சதவீதம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

  • ராணி இரண்டம் எலிசபெத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

  • பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • சீனாவில் கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவு கொரோனா பாதிப்பு தற்போது இருப்பதால் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.


விளையாட்டு:



  • இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்டின் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

  • பிக்பாஷ் லீக்கில் பிரிஸ்பேன் அணியை சிட்னி சிக்சர்ஸ் அணி வீழ்த்தியது.

  • இந்திய மண்ணில் வைத்து இந்திய அணியை வீழ்த்துவது தனது ஆசை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண