விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகேயுள்ள ராம்பாக்கம் கிராமத்தில் திரெளபதியம்மன் கோவில் அருகில் கிராம ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் பேருந்து நிழற் குடை அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றார்.


கோவில் வாயில் முன்பாக பேருந்து நிழற்குடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வளவனூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் பாதுகாப்புடன் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்து நிழற்குடை கோவில் வாயில் முன்பாக நிழற்குடை அமைப்பதினால் தேர் திரும்பமுடியாத சூழல் இருப்பதாக கூறி மீண்டும் கிராம இளைஞர் கார்த்தி என்பவர் இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் வந்தார்.


இளைஞர் தற்கொலை முயற்சி:


இந்த நிலையில் இளைஞர் திடீரென பேருந்து நிழற்குடை அமைக்கும் இடத்திற்கு அருகிலுள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது பேருந்து நிழற்குடை அமைத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியதையடுத்து கிராம மக்கள் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கீழே இறங்காததால் கிராம மக்கள் வளவனூர் பட்டாம்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.


இதனையடுத்து போலீசார் கார்த்தியிடம் பேருந்து நிழற்குடை கட்டுமான நிறுத்தப்பட்டு வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படுமென கூறியதை தொடர்ந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளைஞரை கீழே இறக்கினர். அதனை சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல் ஆய்வாளர் விஜயகுமார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு  சென்றனர். இதனால் ராம்பாக்கம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


 


 




மரக்காணம் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய வெளிநாட்டவரின் சடலம்


மரக்காணம் அருகே மினி வேனில் கடத்திவரப்பட்ட போதைப் பொருட்கள்.... போலீசாரிடம் சிக்கியது எப்படி தெரியுமா?


Crime: பணம் கேட்டு மிரட்டிய ஆன்லைன் லோன் மோசடிக்காரர்கள்.. புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டியதாக புகார்!