விழுப்புரம்:  திண்டிவனம் அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் காப்பீடு திட்ட மூலம் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை மூலம் சரி செய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் மையனூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் மகள் ஜான்சிராணி (29). இவர் 5 வயதிலிருந்து (போலியோ) இளம்பிள்ளை வாதம் தாக்கப்பட்டு வலது கால் பாதிக்கப்பட்டது. இதனால் இவரால் நடக்க முடியாமல் அவதி அடைந்து வந்தார். பின்னர் திண்டிவனத்தில் தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஜான்சிராணி திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உள்ள எலும்பு மூட்டு மருத்துவர் சுரேஷ் என்பவரை அனுகியுள்ளார். இதனால் அவர் அரசு மருத்துவமனையில் சேர்த்து, 8 மாத தொடர் அறுவை சிகிச்சைக்கு பிறகு ஊனமாக இருந்த இடது காலில், 5 சென்டிமீட்டர் வரை எலும்பை வரை செய்து, இரு கால்களும் ஒரே மட்டமாக தற்போது உள்ளது.


இதனால் அவரால் இரண்டு கால்களும் சம நிலைக்கு கொண்டு வந்து நடக்க வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக மருத்துவர் சுரேஷ் கூறுகையில், இளம்பிள்ளை வாதம் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் திண்டிவனம் அரசு மருத்துவமனையை அணுகினால் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலம் சிறந்த மருத்துவ உபகரணங்களை கொண்டு சரி செய்ய முடியும் எனவும், ஜான்சிராணிக்கு தற்போது 29 வயது ஆகிறது. இவர் முன்கூட்டியே அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தால் முன்னதாகவே சிறந்த முறையில் சிகிச்சை அளித்து சரி செய்திருக்கலாம் எனவும், இதேபோல் வேறொரு சிறுவனுக்கு சிகிச்சை செய்யப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


 



போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு சிகிச்சை


போலியோ


போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. போலியோமியெலிட்டிஸ் (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர். போலியோமைலிட்டிஸ் வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது. நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 90% பேரில் அறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை. எனினும் தீநுண்மங்கள் குருதியோட்டத்துடன் கலந்துவிடின் பல வகையான அறிகுறிகள் தோன்றுகின்றன. பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் மைய நரம்புத் தொகுதிக்குள் சென்று இயக்க நரம்பணுக்களைத் தாக்குவதனால் தசைநார்கள் பலவீனமுற்றுத் தீவிரமான தளர்வாதத்தை ( flaccid paralysis) உருவாக்குகிறது. பாதிக்கப்படும் நரம்புகளைப் பொறுத்துப் பலவகையான வாத (paralysis) நிலைமைகள் ஏற்படலாம். முள்ளந்தண்டோடு தொடர்புள்ள இளம்பிள்ளை வாதமே மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றது.


இது பொதுவாகக் கால்களைத் தாக்குகிறது. போலியோவைரசால் உண்டாகும் இந்நோய் முடமாக்கக் கூடியதும் மரணத்தை வரவழைப்பதுமான தொற்று நோய். மனிதரில் இருந்து மனிதருக்குப் பரவுகிறது. இது மூளையையும், தண்டுவடத்தையும் தாக்குவதால் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. போலியோ வைரசுக்கு அறியப்பட்ட ஒரே புகலிடம் மனிதனே. தொற்று உள்ள ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது.


 




மரக்காணம் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய வெளிநாட்டவரின் சடலம்


மரக்காணம் அருகே மினி வேனில் கடத்திவரப்பட்ட போதைப் பொருட்கள்.... போலீசாரிடம் சிக்கியது எப்படி தெரியுமா?


Crime: பணம் கேட்டு மிரட்டிய ஆன்லைன் லோன் மோசடிக்காரர்கள்.. புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டியதாக புகார்!