புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மீனா ரோஷினி (28) என்பவர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்தார்.
முன்னதாக, புதுச்சேரியில் குமாம்பேட் வீட்டு வசதி குடியிருப்பை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி ஒருவர் கடுமையான காய்ச்சல் காரணமாக மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் டெங்கு காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று திடீரென சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
இதுகுறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்லூரி மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி மாணவி இன்று காலை உயிரிழந்தார் என கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் ஒரு மாணவி, பெண் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.