விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனா். அவரிடமிருந்து 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ரயில்வே கேட் அருகில் வளவனூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். உடனே அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


 



டூ வீலர் திருடனிடமிருந்த 9இருசக்கர வாகனகள் பறிமுதல்


விசாரணையில் அவர் விழுப்புரம் அருகே வளவனூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த தீபக்ராஜ் (வயது 46) என்பதும், இவர் விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. ரவுடியான இவர் மீது வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது. இதையடுத்து தீபக்ராஜை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 9 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.


 




மரக்காணம் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய வெளிநாட்டவரின் சடலம்


மரக்காணம் அருகே மினி வேனில் கடத்திவரப்பட்ட போதைப் பொருட்கள்.... போலீசாரிடம் சிக்கியது எப்படி தெரியுமா?


Crime: பணம் கேட்டு மிரட்டிய ஆன்லைன் லோன் மோசடிக்காரர்கள்.. புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டியதாக புகார்!