விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான ஆரோக்கியமான சத்தான கேரட் பீட்ரூட் செவ்வாழை ஆகிய பிளேவர்களில் மால்ட் வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். பெண்கள் சுயதொழில் செய்து முன்னேற தமிழ்நாடு அரசு மகளிர் சுய உதவி குழு மூலம் வீட்டிலேயே இருக்கும் பெண்களின் வாழ்வாதார மேம்படுத்தும் வகையில் இந்த அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஒன்றியங்களின் கீழ் மகளிர் சுய உதவி குழு மூலம் அலங்கார பொருட்கள் கைவினைப் பொருட்கள் உணவு பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தனலட்சுமி கார்டன் பகுதியில் 15 நபர்கள் கொண்ட தமிழ் மகளிர் சுய உதவிக் குழு மூலம் கேரட் மால்ட், பீட்ரூட் மால்ட், செவ்வாழை மால்ட் வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்து வர்ருகின்றனர். பீட்ரூட்களை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி, அதனை மிக்ஸியில் 3 முறை அரைத்து பிறகு பெரிய வாணலில் நாட்டு சக்கரை, முந்திரி, ஏலக்காய் அரைத்த பீட்ரூட்டை சேர்த்து நன்கு  கிளற வேண்டும்.  பின்னர்  நல்ல பதத்திற்கு வந்தவுடன் ஒரு டிரேயில் கொட்டிய பிறகு நல்ல வெயிலில் காய வைக்க வைத்து, பின்னர் அதனை மிக்ஸியில் அரைத்து எடுத்து கொண்டால் சுவையான மால்ட் பவுடர் கிடைக்கும்.




இந்த மால்ட் பவுடரை பால் அல்லது சுடு தண்ணீரில் 2 ஸ்பூன் வீதம் ஒரு நாளைக்கு நான்கு முறை குடிக்கலாம் என தெரிவித்தனர். இந்த பவுடர் குடிப்பதன் மூலம் பெண்களின் மாதவிடாய் பிரச்சினையை சரி செய்கிறது. உயர் ரத்தம் அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் உடலில் ரத்தம் அதிகரித்து உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.  இங்கு தயார் செய்யப்படும் பீட்ரூட் மால்ட் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இங்கு தயார் செய்யப்படும் மால்ட் வகைகள் அனுப்பப்படுகிறது.




விழுப்புரம் மாவட்ட செய்திகள் : 


Differently Abled Scholarship: மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு


கிராமங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எம்எல்ஏ லட்சுமணன்


Crime: ஆவின் பால் பூத் வைப்பதில் தகராறு; விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. நிர்வாகி - பெரும் அதிர்ச்சி..!


புதுச்சேரி, விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.