விழுப்புரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா - ஆளுங்கட்சி பிரமுகர்கள் தலையிடால் அவதி

விழுப்புரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

விழுப்புரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். தேசிய ஊரக வேலை திட்ட பணிகளை செய்யவிடாமல் ஆளும் கட்சியினர் தடுப்பதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

Continues below advertisement

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகத்தை கோலியனூர், விக்கிரவாண்டி, மயிலம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் முற்றையிட்டனர். தொடர்ந்து தரையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் நடைபெறும் பணிகளை செய்ய ஊராட்சி மன்ற தலைவருக்கே அதிகாரம் இருப்பதாகவும்,

ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்த விக்கிரவாண்டி சட்ட மன்ற உறுப்பினர் புகழேந்தி மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு தெரியாமலேயே சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதாகவும், ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவர் செய்து வரும் பணியை தடுத்து ஆளும் கட்சியினர் பணியை செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஊராட்சி மன்ற கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஊராட்சி மன்ற தலைவர்களின் போராட்டம் காரணமாக மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola