கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், பள்ளி ஒன்றில், ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு, பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்ததை அடுத்து, இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரத்தில், இஸ்லாமிய மாணவிகளுக்குப் போட்டியாக இந்து மாணவர்களும், மாணவிகளும் காவித் துண்டு அணிந்து பள்ளிக்கு வர முயன்றனர். இந்த விவகாரம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியதை அடுத்து, இரு தரப்பினரும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகல்கோட், தவனகிரி, உடுப்பி உள்ளிட்ட பகுதிகளில், போராட்டங்கள் நடைபெற்றன.இதற்கிடையே, ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி கிருஷ்ணா தீக்சித் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
அப்போது, கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். மேலும், ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சினையை கர்நாடக ஐகோர்ட்டின் விரிவான அமர்வு விசாரிக்கும் என உத்தரவிட்டார். இந்த விவகாரம் பூதாகரமாகும் இந்நிலையில் பல தரப்பினரும் இதற்கான கண்டனஙக்ளையும், இதற்கான போராட்டாங்களையும் ஆங்காங்கே நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கார்நாடகவில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் பேசிய அவர்கள், மத அடையாளங்களை அணிந்து கொண்டு வரக்கூடாது எனம் காரணத்தை சொல்லி இஸ்லாமிய பெண்களை வகுப்புகளுக்கு வராமல் தடுக்கும் பாஜக அரசு நிர்வாகம் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் பொட்டு, விபூதி, ருத்ராட்சை, சிலுவை, போன்ற பிற அடையாளங்களை காணவில்லையா எனவே இது திட்டமிட்டு மக்களை பிரிப்பதற்காக நடக்கும் நாடகம், மேலும் கர்நாடகத்தில் ஆளும் பாஜக அரசு அடுத்த ஆண்டு வரும் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு ஓட்டுகளை பிரிப்பதற்காக அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
மேலும் ஜனநாயக ரீதியாக போராடி வரும் பெண்களை இந்துத்துவா கும்பலை வைத்து ஐந்து நிமிடத்தில் கலைத்து விடுவேன் என மிரட்டும் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் யஷ்பால் சுவர்மா, ஹிஜாப் அணிய வேண்டும் என்றால் பாகிஸ்தான் செல்லுங்கள் என்று சொல்லும் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் BB யாத்நால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய கூடாது எனும் கேள்வியை கர்நாடக உயர்நீதிமன்றம் ஆளுநரிடம் கேட்க வேண்டாமா?, என கேள்வி எழுப்பினர். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கண்டன குரல் எழுப்ப வேண்டும் என இஸ்லாமிய சமுதாயம் எதிர்பார்ப்பதாகவும் பேசினர்.