விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஆலகிராமத்தில் அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் நடத்துனர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுகாயம் அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து திண்டிவனத்தில் இருந்து தடம் எண் 24 அரசு பேருந்து நெடி கிராமத்திற்கு இன்று காலை சென்று விட்டு திண்டிவனம் திரும்பும் வழியில் ஆலகிராமம் என்னும் இடத்தில் எதிரே வரும் வாகனத்திற்காக ஓட்டுநர் அய்யனார் பேருந்தை வலது புறமாக திருப்பிதாக கூறப்படுகிறது.


நிலைத்தடுமாறிய பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மேல் சித்தாமூர் பகுதியில் சேர்ந்த மீனா தொட்டி பகுதியை சேர்ந்த துளசி கிராமத்தை சேர்ந்த சத்யா நெடி கிராமத்தைச் சேர்ந்த பொன்னியம்மாள் கல்ராயன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுகாயம் அடைந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை கூட்டணிப்பட்டி நடைபெறும் வார சந்தைக்கு காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக நெடி, தென்புத்தூர், நெடிமோழியனூர், ஆலகிராமம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து அதிக அளவில் பெண்களும், வயதானவர்களும் வந்ததால் பேருந்து தொங்கிய நிலையில் சென்றதாக கூறப்படுகிறது.


இதன் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. விபத்து நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வர தாமதமானதால் அங்கிருந்த சிலர் கார் மற்றும் ஆட்டோக்களில் காயமடைந்தவர்களை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஐந்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனம் ஆகியன வரவழைக்கப்பட்டன.




இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் கட்டாயம்: உயர் கல்வித்துறை உத்தரவு


shashi tharoor : காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆகிறாரா சசிதரூர்? உள்கட்சித் தேர்தல் பரபரப்பு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர