அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப் படிப்புகளில் 2ஆவது செமஸ்டரில் தமிழ் பாடம் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சில பல்கலைக்கழகங்களில் தமிழ் பாடம் நடத்தப்படுவதில்லை என்று புகார் எழுந்ததை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாக்குவது குறித்து உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர். கார்த்திகேயன் ஐஏஎஸ் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பதிவாளர்கள் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:


''உயர் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வரும் இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளில் (2nd semester in all UG courses) தமிழ் மொழி பாடத்திட்டம் சில பல்கலைக்கழகங்களில் நடத்தப்படுவதில்லை என அறியப்படுகிறது.


இந்நிலையை மாற்றி அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான இரண்டாம் ஆண்டு பருவ தேர்வுகளிலும் இனி தமிழ் மொழி பாடத்திட்டத்தினை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த வகையில் இளங்கலை சட்டப்படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வரும் இரண்டாம் ஆண்டு பருவ தேர்வுகளிலும் இனி தமிழ் மொழி பாடத்திட்டத்தினை சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


எனினும் இந்த அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் பொருந்தாது''.


இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை வெளியிட்டார்.


அதைத் தொடர்ந்து அவர் பேசும்போது, ’’பொறியியல் கல்லூரி பாடத்திட்டங்களைப் போலவே, கலை, அறிவியல் பாடத்திட்டங்களும் மாறுகின்றன என்றும் இந்த மாற்றம் இந்த ஆண்டு இரண்டாவது செமஸ்டரில் அமல்படுத்தப்படும். இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் தமிழ் பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ் பாடம் கட்டாயம் கொண்டு வரப்படும்’’ என்று அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதையும் வாசிக்கலாம்


GATE 2023 Exam: பொறியியல் Gate தேர்வு தேதிகள் அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?


CM Stalin Speech: தமிழகத்தில் உயர் கல்வியின் தரம் குறைகிறதா; நீட், கல்விக் கொள்கையை எதிர்ப்பது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் பேச்சு


வகுத்தல் பாடம் தெரியாமல் விழித்த தலைமை ஆசிரியை; ஆட்சியர் செய்த அதிரடி 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.