விழுப்புரம்: சிறுவந்தாடு அருகேயுள்ள மோட்சகுளம் கிராமத்தில் தமிழக அரசால் கட்டி கொடுக்கப்பட்ட ஆதிதிராவிட தொகுப்புவீட்டின் மேற்காரை இடிந்து விழுந்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு  அருகேயுள்ள மோட்சக்குளம் கிராமத்தில் ராஜமாணிக்கம் அவரது மனைவி யாசகம் தம்பதியினர் தமிழக அரசால் கட்டி கொடுக்கப்பட்ட ஆதிதிராவிட தொகுப்பு  வீட்டில் தனியாக வாடகைக்கு வசித்து வருகின்றனர். தமிழக அரசால் ஆதிதிராவிட தொகுப்பு வீடு பத்து குடும்பங்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டி கொடுக்கப்பட்டு பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொகுப்பு வீட்டின் மேற்கூரையானது வலுவிழந்து உள்ளதால் ராஜமாணிக்கம் என்பவரது வீட்டின் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சிகள் அதிகாலையில் தீடீரென பெயர்ந்து விழுந்துள்ளது.


இதில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த முதியவரான ராஜமாணிக்கதில் தலையில் விழவே ராஜமாணிக்கம் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் உறங்கிகொண்டிருந்த அவரது மனைவி யாசகம் காயங்களுடன் இருந்துள்ளார். திடிரென அலறல் சத்தமும் சிமெண்ட் காரை விழுந்த சத்தத்தை கேட்டு  வீட்டின் அருகிலிருந்தவர்கள் ராஜமாணிக்கத்தின் வீட்டினுள் சென்று  பார்த்த போது ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சமபவம் குறித்து அப்பகுதியினர் வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் மற்றும் தாசில்தார் சம்பவ இடத்தில் விசாரனை மேற்கொண்டனர்.


மோட்சகுளம் கிராமத்தில் வாழ தகுதியற்ற பத்து வீடுகளிலும் குடும்பங்கள் வசித்து வருவதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மோட்சகுளம் கிராமத்தில் இது போன்று ஆபத்தான நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் சரியாக புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இது விபத்து ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




மரக்காணம் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய வெளிநாட்டவரின் சடலம்


மரக்காணம் அருகே மினி வேனில் கடத்திவரப்பட்ட போதைப் பொருட்கள்.... போலீசாரிடம் சிக்கியது எப்படி தெரியுமா?


Crime: பணம் கேட்டு மிரட்டிய ஆன்லைன் லோன் மோசடிக்காரர்கள்.. புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டியதாக புகார்!