விழுப்புரம்: விழுப்புரத்தில் சந்திராயன் திட்ட இயக்குனர் 3 வீரமுத்துவேலின் தந்தை பழனிவேலை சந்தித்து வாழ்த்து தெரிவித்த, காமெடி நடிகர் ரோபோ சங்கர் தமிழகத்தின் ரியல் சூப்பர் ஸ்டார் வீரமுத்துவேல் தான் என தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் திருவீக வீதியில் வசிக்கும் சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலின் தந்தை பழனிவேலை நிலவில் வெற்றி கரமாக சந்திராயன் 3 தரையிரக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டு வருவதை முன்னிட்டு முன்னிட்டு காமெடி நடிகர் ரோபோ சங்கர் குடும்பத்துடன் சந்தித்து புங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த நடிகர் ரோபோ சங்கர், பின் தங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்த வீரமுத்துவேல் இந்த மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் விதமாக சந்திராயன் 3 திட்டத்தில் வெற்றி பெற்றிருப்பதாகவும் அனைத்து மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக கூறினார்.
தமிழகத்தில் அடுத்த பத்து ஆண்டுகளில் போதை முழுமையாக ஒழிக்கப்படுமெனவும் இதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதால் போதை என்ற வார்த்தை இல்லாத அளவிற்கு தமிழகம் மாறும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு பதிலளித்த ரோபோ சங்கர் அடுத்த சூப்பர் என்று என்னை கேட்டால் நான் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறுவேன் தன்னை பொறுத்தவரை ரியல் சூப்பர் ஸ்டார் வீரமுத்துவேல் தான் பெருமிதம் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
திண்டிவனம் நகராட்சியில் 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா அறிவிப்பு - காரணம் என்ன..?
தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் 20% கூடுதலாக விற்பனை செய்ய நடவடிக்கை - அமைச்சர் மனோதங்கராஜ்
ஆய்வுக்கு வருவதை கண்டு உணவகத்தை மூடிய உரிமையாளர்; சுவர் எகிறிகுதித்து ஆய்வு செய்த அதிகாரிகள்