தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆய்வு மேற்கொண்டு வரும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்களில் ஆய்வு செய்வதற்காக வருகை தந்த அவர், புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக சாமி தரிசனம் செய்த கோயிலுக்கு வந்த அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


அதனை தொடர்ந்து மூன்று ஆண்டு காலமாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்த தங்கத்தேரினை அமைச்சர் வடம் பிடித்து இழுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதற்கு முன்னதாக சிறப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த அம்பாளை தோளில் சுமந்தவாறு அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டவர்கள்  திருக்கோவிலில் வலம் வந்தார். அதனை தொடர்ந்து திருக்கோவிலில் சைவசமய அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளியை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.


காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் குறைந்த மழை - தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு 30,000 கனஅடியாக குறைந்தது



அதை தொடர்ந்து திருக்கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் கலைஞர் தல மரக்கன்று நடும் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிலையில் அண்ணாமலையார் கோயில் வெளிப்பிரகாரத்தில் வட ஒத்தவாடை வீதியில் அறநிலையத்துறை சார்பில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருத்துவ முதலுதவி சிகிச்சை மையத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.


இதனை தொடர்ந்து கிரிவலபாதையில்  ஈசானிய லிங்கம் அருகே  ₹31.24 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட யாத்ரி நிவாஸ் பக்தர்கள் தங்கும் விடுதியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பக்தர்களின் பயன்பாட்டிற்காக குத்து விளக்கேற்றி அமைச்சர்கள் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி, திருவண்ணாமலை  நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட எஸ்.பி. பவன்குமார், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Rajinikanth Meets PM Modi | பிரதமர் மோடியை சந்தித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்



மேலும் அமைச்சர் வருகையால் அண்ணாமலையார் கோவில் மற்றும் புதிய கட்டிடங்கள் திறக்கும் இடங்களில் கொரொனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் முக கவசம் அணியாமலும் தனி மனித இடைவெளியை பின்பற்றாமலும் பொதுமக்களும் திமுக நிர்வாகிகளும் திரண்டது குறிப்பிடத்தக்கது.


Biggboss Tamil 5 | டாஸ்க்கை சரியாக விளையாடாத பாவனி, மதுமிதா.. நெருப்பை மூட்டிய பிக்பாஸ்..!