இந்திய சினிமாவின் உச்ச விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது. செவாலியே சிவாஜி கணேசன், அமிதாப் பச்சன், கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு பிறகு ரஜினிகாந்த் இந்த விருதை பெற்றுள்ளார்.


இதனையடுத்து அவருக்கு இந்தியா முழுவதுமிலிருந்து திரைத்துறையினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ரஜினியை குடியரசு தலைவர் மாளிகைக்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.


இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். அப்போது தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். 


இதுதொடர்பான புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும், பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.





விருதுகள் பெற்ற அப்பா ரஜினிகாந்துடனும், கணவர் தனுஷுடனும், ஐஷ்வர்யா தனுஷ் பகிர்ந்த புகைப்படங்கள் இதோ..