திருவண்ணாமலை (Tiruvannamalai News): நாடுமுழுவதும் இன்று இந்திய திருநாட்டின் 77வது சுதந்திர தின விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது வருகின்றது. அதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் இருவரும் திறந்த வெளி வாகனத்தில் ஏறி துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரை பார்வையிட்டனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஏற்றுக்கொண்டார்.


Watch Video: தேசிய கொடி ஏற்றிய பிரதமர்.. பூக்களை தூவி வாழ்த்திய விமானப்படை ஹெலிகாப்டர்.. வீடியோ..


 




சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ் 


பின்னர் காவல்துறை, வருவாய் துறை, சுகாதார துறை, கல்வித்துறை, பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 592 அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ் விருதுகள் மற்றும் மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி 192 பயனாளிகளுக்கு 1 கோடியே 80 ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசு மற்றும் பள்ளி கல்லூரிகள் என பல இடங்களில் நடைபெற்றது. அதில் அதிகாரிகள் கொடியேற்றி வைத்து கொண்டாடினர்.


PM Modi Speech: சுதந்திர தின உரையில் மணிப்பூர் விவகாரம் - பிரதமர் மோடி என்ன சொல்லி இருக்காரு பாருங்க..!


 




 


திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தேசிய கொடியை ஏற்றினார். வட்டாட்சியர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.


Independence Day Speech: 77வது சுதந்திர தினம்.. செங்கோட்டையில் நீண்ட நேரம் உரையாற்றிய பிரதமர் யார் தெரியுமா?