நாட்டின் 77வது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசாரும், பாதுகாப்பு படை வீரர்களும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மலர்தூவிய விமானப்படை ஹெலிகாப்டர்:
இந்த நிலையில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தபோது, இந்திய விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலமாக வண்ண மலர்கள் தூவப்பட்டது. இது அங்கிருந்த மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பின்பு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் முப்படைகளின் அணிவகுப்பை பார்வையிட்டனர். முப்படைகளின் அணிவகுப்பை காண செங்கோட்டையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். பின்னர், பிரதமர் மோடி செங்கோட்டையில் உரையாற்றினார்.
பிரதமர் மோடி செங்கோட்டையில் தொடர்ச்சியாக 10வது சுதந்திர தினத்திற்கு தேசிய கொடியை இன்று ஏற்றினார். அடுத்தாண்டு மக்களவை தேர்தல் என்பதால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் கட்சியின் பிரதமரே அடுத்தாண்டு சுதந்திர தினத்திற்கான தேசிய கொடி ஏற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாக்கோலத்தில் டெல்லி:
பிரதமர் மோடி டெல்லியில் தேசிய கொடி ஏற்றிவைப்பதை முன்னிட்டு டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் என மத்தி அமைச்சர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும், எம்.பி.க்களும் பங்கேற்றனர். முக்கிய அரசியல் தலைவர்களுடன் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றதால் டெல்லி போலீசார் மட்டுமின்றி தேசிய பாதுகாப்பு படை, மத்திய பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் ஆகியோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
77-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்க சுமார் 1800 சிறப்பு விருந்தினர்களுக்றகு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தான் ஆற்றிய உரையில், மணிப்பூர் விவகாரம், ஊழல் விவகாரம் குறித்து பேசினார். குறிப்பாக, கலவரத்தில் மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ள மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: PM Modi Speech: சுதந்திர தின உரையில் மணிப்பூர் விவகாரம் - பிரதமர் மோடி என்ன சொல்லி இருக்காரு பாருங்க..!
மேலும் படிக்க: Varanasi: பிரதமர் மோடியின் கோட்டையை குறிவைக்கிறாரா பிரியங்கா காந்தி? வாரணாசி தொகுதியில் ஸ்கெட்ச் போடும் மெகா கூட்டணி