அரூரில் நான்கு வயது குழந்தை விழுங்கிய 5 ரூபாய் நாணயத்தை, 5 நிமிடத்தில், நேர்த்தியாக வெளியே எடுத்த அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தருமபுரி மாவட்டம் அரூர் வீரப்பநாய்க்கன்ப்பட்டியை சேர்ந்த முனிவேல்-ஜெயஸ்ரீ தம்பதியினருக்கு நான்கு வயதில் ரிஷ்வந்த் என்கிற குழந்தை உள்ளது. நேற்று காலை குழந்தை ரிஷ்வந் தாய் ஜெயஸ்ரீ இடம் ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு தின்பண்டங்களை வாங்கிச் சென்றுள்ளார். ஆனால் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென வாயில் வைத்திருந்த 5 ரூபாய் காயினை எதிர்பாராத விதமாக விழுங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தாய் ஜெயஸ்ரீயிடம், சிறுவன் காயின் விழுங்கியதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து தாய் ஜெயஸ்ரீ உறவினர்கள் உதவியுடன் அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர் அருண் தலைமையில் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட மருத்து குழுவினர் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். முதலில் குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர். அப்போது தொண்டை குழியில் காயின் இருப்பதை கண்டறிந்தனர்.
இதனையடுத்து குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து லரிங்கோ ஸ்கோப் உதவியுடன், 5 நிமிடத்தில் குழந்தையின் தொண்டைக் குழியில் மாட்டியிருந்த காயினை, பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த 5 நிமிடத்தில் துரிதமாக மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்யைளித்தால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.
இதனால் குழந்தையின் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் ஐந்து ரூபாய் காயினை விழுங்கி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பத்து நிமிடங்களில் பாதுகாப்பாக காரில் எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு அருள் பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
பெற்றோர் தங்கள் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: ”விருது கிடைச்சதே 25 வருஷங்களுக்குப் பிறகுதான் தெரியும்” : அலறவிட்ட பேய்ப்பட நாயகி ஓப்பன் டாக்..
‛டிச.5 மெரினாவுக்கு வாங்க...’ அதிமுக செயற்குழு கூடும் நிலையில் சசிகலா அழைப்பு!