முப்பது ஆண்டுகாலமாக திரைத்துறையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை மிதா வசிஷ்ட். இவர் சமீபத்தில் வெளியான Chhorii என்னும் பாலிவுட் ஹாரர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் மிதா வசிஷ்டின் நடிப்பிற்கு மிகுந்த பாராட்டுகள் கிடைத்தது. இந்த படம் கடந்த 26 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. கடன் பிரச்சனையால் பயந்து கரும்பு காட்டிற்குள் செல்லும் கர்ப்பிணி கதாநாயகியும் அவரது கணவரும் சந்திக்கும் அமானுஷ்ய விஷயங்கள்தான் படத்தின் ஒன்லைன். இந்த படம் குறித்து பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேச்சியளித்த மிதா வசிஷ்ட் . படம் மற்றும் தனது வாழ்க்கை குறித்த நிறைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
மிதான் வசிஷ்ட் பாலிடிவுட்டில் பரீட்சியமானவர் . பல முக்கிய திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் Chhorii படத்தில் தான் நடித்த அனுபவங்களை பகிர்ந்த அவர் ” மத்திய பிரதேசத்தில் உள்ள கரும்பு வயல்களில் படமாக்கினோம், கரும்புகள் கிட்டத்தட்ட 7-7.5 அடி உயரம் இருந்தன .அங்குதான் படம் செட் அமைத்து படமாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 100 கிமீட்டருக்கு அப்பால்தான் ஊர் இருந்தது என்றார். மேலும் தான் படத்தின் கதைகளை தேர்ந்தெடுப்பது குறித்து பேசிய அவர், ஒவ்வொரு கதாபாத்திரத்திரத்திற்காகவும் , மொழிக்காகவும் நான் உழைக்கிறேன். ஹோம் வொர்க் செய்வதுதான் எனக்கு வழக்கம் . உச்சரிப்பு முதல் பாவனைகள் வரை அனைத்திலும் கவனம் செலுத்துவேன்.பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்கு என்னால் ஆன முயற்சியை செய்வேன் என்றார்.
30 வருடங்களாக நடித்து வரும் நடிகைக்கு போதுமான அங்கீகாரம் கிடைத்துவிட்டதா அல்லது விருதுகளை எதிர்பார்த்து உழைக்கிறாரா என கேட்டால் , அவர் ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். ”1991 ஆம் ஆண்டு வெளியான த்ரிஷ்டி திரைப்படத்திற்காக நான் சிறந்த துணை நடிகைக்கான திரைப்பட பத்திரிகையாளர் சங்க விருதை பெற்றிருந்தேன் ,ஆனால் அது எனக்கு 20-25 வருடங்களுக்குப் பிறகுதான் தெரியும். இணையத்தில் படித்தேன். இயக்குநர் கோவிந்த் நிஹலானியை அழைத்து அது உண்மைதானா என உறுதிபடுத்தினேன். இதுதான் நான் . உண்மையில் இந்த கேள்வி கேட்கப்பட்டதுதான் எனக்கு விருதாக உணர்கிறேன் என ஆச்சர்யமான பதிலை கொடுத்துள்ளார் மிதா.
மேலும் விருது என்பது கதாபாத்திரங்களின் தேர்வை பொறுத்து அமைகிறது. நான் அப்படியாக கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில்லை .மேலும் இளம் வயதில்தான் அதெல்லாம் தேவைப்படும் . 20 - 25 ஆண்டுகளுக்கு பிறகு உங்களின் உழைப்புதான் பேசும் . நான் விருது வழங்கும் விழாவில் ஜூரியாக இருந்த போது சில சமயங்களில் அது சீரற்றதாக உணர்ந்திருக்கிறேன் என்கிறார் மிதா வஷிஸ்ட். பிரபல நடிகையில் இந்த பேச்சு தற்போது பாலிவுட் பக்கம் கவனத்தை பெற்றுள்ளது.