திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த  10ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  அதில் இருந்து காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் மற்றும் இரவு நேரங்களில் பஞ்சமூர்த்திகளின் உற்சவம் அண்ணாமலையார் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் பவனி வந்தனர். அதனை தொடர்ந்து 19 ஆம் தேதி  அண்ணாமலையார் கோவிலில் உள்ள பிரதோஷ மண்டபத்தில் காலையில் பரணி தீபமும் மாலை  கோவிலின் பின்புறம்  உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் கோவிலின் வலகத்தில் தீப தரிசனம் மண்டபத்தில் எதிரே அர்த்தநாரீஸ்வரர் ருத்தர தாண்டவம் ஆடி எழுந்தரளிய பின்னர் 6 மணி அளவில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அதில் இருந்து மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் தரிசனம் கிடைக்கும்.

Continues below advertisement

இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2 வருடத்திற்கு மேலாக கிரிவலம் சுற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்திருந்து. அதன் பிறகு இதை எதிர்த்து, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அனைத்து பக்தர்களையும்  திருவண்ணாமலை கிரிவலத்திற்கு 20,000 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்பளித்தது. இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் நாளை பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கிரிவலப்பாதையில் மொத்தமாக 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம். அதில் உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் நபர்களும் , வெளியூர் பக்தர்கள் 15 ஆயிரம்   நபர்களும்   அனுமதி வழங்கப்படலாம் எனவும் . பரணி தீபத்தின் போது, கட்டளைதாரர்கள் 300  நபர்களும்  அனுமதி வழங்கலாம் என்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

Continues below advertisement

இலங்கை சிறைவாசிகளை இந்தியாவுக்கு மாற்ற கோரிய வழக்கு - மத்திய அரசு பதில் தர உத்தரவு

அதனை தொடர்ந்து நேற்றுடன் மகா தீப தரிசனம் நிறைவு பெற்றது. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாட்களை தவிர கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து சாமி தாிசனம் செய்தனர். மேலும் ஏராளமானோர் கிரிவலம் சென்றனர். இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்கள் ஆகியவற்றில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் 1 கோடியே 21 லட்சத்து 46 ஆயிரத்து 133 ரூபாயும், 243 கிராம் தங்கமும், 979 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டது.

கடலூரை அடுத்தடுத்து தாக்கும் வெள்ளம் - நேற்று மட்டும் ஒரே நாளில் 17 செ.மீ மழை