அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகின்ற இருபத்தி மூன்றாம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஒற்றை தலைமையை ஆதரித்து தீர்மானம் கொண்டுவர அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக உள்ளார். ஆனால் ஒற்றை தலைமைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் இரண்டு தரப்பிலும் தங்களது 2 ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாக பொதுக்குழு கூட்டத்தில் தனது செல்வாக்கை நிரூபிப்பதற்காக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வியூகம் வகுத்து வருகிறார். இதனால் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெரும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக தமிழகம் முழுவதும் தனது ஆதரவான மாவட்டச் செயலாளர்களை களத்தில் இறக்கியுள்ளார். இதன் மூலமாக ஒவ்வொரு மாவட்டங்களாக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி ஆதரவு கோரப்பட்டுள்ளது.
அதன்படி அதிமுகவின் தெற்கு மாவட்டங்களில் உள்ள பொதுக் குழு உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டப்படுகிறது.இந்நிலையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் வந்தவாசி அடுத்த வீரம்பாக்கம் கிராமத்தில் தனியார் உணவகத்தில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் தமிழக அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏக்கள் கலசபாக்கம் பன்னீர்செல்வம்,பெரணமல்லூர் அன்பழகன், உள்ளிட்ட மாவட்ட, நகர, பேரூர்,கழக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய கட்சி பிரமுகர்கள் உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது சென்னையில் நடைபெற்ற உள்ள பொதுக்குழுவில் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும், அப்போது ஒற்றை தலைமை கோரிக்கையை வலியுறுத்தி மாநில அளவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் தூசி மோகன் தீர்மானத்தை வாசித்தார்.
EXCLUSIVE: OPS-யின் அதிரடி மாஸ்டர் ப்ளான்... செக் வைக்க திட்டமிட்டு காய்நகர்த்தல்!
பின்னர் அனைவரும் தீர்மானத்தை வரவேற்றதால் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்த உறுதிமொழி பத்திரத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. மேலும் இந்த ஒற்றை தலைமையை அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியே ஏற்க வேண்டும் என்று உறுதிமொழி பத்திரத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளதாக அதிமுக தொண்டர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்,அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முக்கூர்சுப்பிரமணி, S. ராமச்சந்திரன் சட்டமன்ற உறுப்பினர்கள் தூசி மோகன், ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதாரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.