செங்கத்தில் இந்திய கம்னியூஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ’காமாலை உள்ளதால் கண்ணும் தெரியவில்லை காதும் கேட்கவில்லை’ என கடும் விமர்சனம் செய்தார்.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்ரிபாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கம் வட்ட 13 வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய முத்தரசன் திருப்பூரில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெள்ளையனே வெளியேறு, என்ற இயக்க நாளான அன்று ஒன்றிய அரசை கண்டித்து "மோடியே வெளியேறு" என்ற மாபெரும் மாநில மாநாடு நடத்த போவதாகவும் கூறினார். 


 




 


பின்னர் பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பத்திரிகையாளர் சந்திப்பில்,


தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு காமலை உள்ளதால் கண்ணும் தெரியவில்லை காதும் கேட்கவில்லை. கச்சத்தீவை திமுக தாரவாக்கவில்லை, அப்போதைய இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஆட்சியில் இலங்கையுடன் நட்புறவாக இருக்கவேண்டுமென கச்சத்தீவை கொடுத்துள்ளார். தமிழர்கள் கச்சத்தீவுக்கு சென்று மீன் பிடிக்கலாம் வலைகளை உலர்த்தலாம் என விதிகள் இருந்தும், இலங்கை அரசு விதிகளை மதிக்காமல் நடந்து கொள்கிறது. அண்ணாமாலைக்கு காமாலைகண் உள்ளதால் கண்ணும் தெரியவில்லை. காதும் கேட்கவில்லை. எனவே நல்ல மருத்துவரை பார்த்து சரி செய்து கொள்ள வேண்டுமென கடுமையாக பேசினார். அண்ணாமலை சமீபத்தில் அரசியலில் சேர்ந்தவர், அரசு பணத்தில் பயிற்சி பெற்று அரசு உறுதிமொழியை காற்றில் பறக்க விட்டு தனது பெயர் தினமும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் வரவேண்டும் என்பதற்காக எது வேண்டுமானாலும் பேசி வருகிறார். 


 




 


ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறும் அண்ணாமலை பிரதமர் நிதியில் எத்தனை ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும். ஆண்டுக்கு இரண்டு கோடி மக்களுக்கு வேலை தருவதாக கூறியதை ஏன் செய்யவில்லை, வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருக்கும் 15 லட்சம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்வதாகக் கூறியதை ஏன் செய்யவில்லை, ஆகஸ்ட் 9 ஆம் தேதி திருப்பூரில் நடைபெறும் மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சுவடு இருக்கிறதா இல்லையா என்பது அண்ணாமலைக்கு தெரியவரும் என்று தெரிவித்தார்.


Madurai: குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார் : அண்ணாமலைக்கு அமைச்சர் சவால்!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண