வள்ளியூர் - ஆரல்வாய்மொழி  ரயில் நிலையங்களுக்கு இடையே மார்ச் 4 முதல் மார்ச் 13 வரை இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது.






இதன் காரணமாக திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் (22627/22628), தாம்பரம் நாகர்கோவில் தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (16191/16192) ‌ மற்றும் புதுச்சேரி கன்னியாகுமரி புதுச்சேரி வாராந்திர விரைவு ரயில் (16861/16862) ஆகியவை மார்ச் 4 முதல் மார்ச் 13 வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டு திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.








மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - 10 ஆயிரம் வரை செலவு செய்தும் 10 ரூபாய்க்கு விலைபோகும் முள்ளங்கி - குப்பையில் கொட்டுவதாக விவசாயிகள் வேதனை


தற்போது இரட்டை ரயில்பாதை இணைப்பு பணிகள் நடைபெறுவது பின் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில், தாம்பரம் நாகர்கோவில் தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில்  மற்றும் புதுச்சேரி கன்னியாகுமரி புதுச்சேரி வாராந்திர விரைவு ரயில் ஆகியவை வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்படும்.


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Local body election 2022 : வெற்றிபெற்ற இளம் கவுன்சிலர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ?