தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளை  தி.மு.க. கைப்பற்றியது. திருச்சி மாவட்டத்தில் 14 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 13 பேரூராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது. திருச்சி மாவட்டம் பொன்னம்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் சுயேச்சை 6 வார்டுகளிலும், தி.மு.க. 4 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், வி.சி.க., மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க. தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. சிறுகமணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 8 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 4 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும் வென்றுள்ளன. தா.பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 11 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சுயேச்சை தலா ஒரு வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும் வென்றுள்ளன. மேட்டுப்பாளையத்தில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 13 வார்டுகளிலும், அ.தி.மு.க., சுயேச்சை தலா ஒரு இடங்களிலும் வென்றுள்ளனர்.

 



 

கூத்தைப்பார் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 14 வார்டுகளிலும், காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலா ஒரு இடங்களிலும் வென்றுள்ளன. தொட்டியம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 10 வார்டுகளிலும்,  அ.தி.மு.க. 3 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சுயேச்சை தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் பூவாளூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 7 வார்டுகளிலும், அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், சுயேச்சை 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.புள்ளம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. 4 வார்டுகளிலும், சுயேச்சை 3 வார்டுகளிலும் வென்றுள்ளன.கல்லக்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 8 வார்டுகளிலும், சுயேச்சை 3 வார்டுகளிலும், அ.ம.மு.க.2 வார்டுகளிலும், வி.சி.க., அ.தி.மு.க. தலா ஒரு வார்டுகளிலும் வென்றுள்ளன.உப்பிலியபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வென்றுள்ளன.

 



 

பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 10 வார்டுகளிலும், அ.தி.மு.க. 4 வார்டுகளிலும், ஐ.ஜே.கே. ஒரு வார்டிலும் வென்றுள்ளனர். மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. தி.மு.க. 16 வார்டுகளிலும், ம.தி.மு.க., காங்கிரஸ் தலா ஒரு இடங்களிலும் வென்றுள்ளன. எஸ்.கண்ணனூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 10 வார்டுகளிலும், சுயேச்சை 2 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒரு வார்டிலும் வென்றுள்ளன. காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில்  தி.மு.க. 9 வார்டுகளிலும், அ.தி.மு.க.2 வார்டுகளிலும், சுயேச்சை 2 வார்டுகளிலும், வி.சி.க., காங்கிரஸ் தலா ஒரு இடங்களிலும் வென்றுள்ளது. திமுக மீண்டும் திருச்சி மாவட்டத்தை முழுமையாக கைப்பற்றியது.