திருச்சி TVS டோல்கேட் அருகில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில், பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதாரப் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வு கூட்டத்தில்,  நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் அன்பழகன்,  மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியினை அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.


இதனை தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேடையில் பேசும் போது, “தமிழகத்தில் மருத்துவம், மற்றும் பேரிடர் துறையில் அனைத்து துறை அதிகாரிகளும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். ஆகையால் தான் எந்தவிதமான பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்க முடிந்தது. மேலும் உலகத்திற்கே முன்னுதாரணமாக இருப்பது மக்களை தேடி மருத்துவம் திட்டம் தான். மற்ற மாநிலங்கள், நாடுகளில் இந்த திட்டத்தை பற்றி பெருமையாக விவாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் கடந்த 6 மாதகாலமாக இறப்புகள் ஏற்படாமல்,  தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளது. இதனை தொடர்ந்து  டெங்கு காய்ச்சல் பாதிப்பால், இறப்பு என்பது 2 என்ற எண்ணிக்கையில் தான் உள்ளது. இதற்கு காரணம் அனைவரும் இணைந்து செயல்பட்டது தான்.  மதுரைக்கு ஆய்வுக்கு  சென்ற போது  அரசு மருத்துவ மனையில் உரிய நேரத்தில் மருத்துவர் இல்லை, இதுபோன்று இன்னொரு முறை தமிழகத்தில் நடக்ககூடாது. மருத்துவம் என்பது மக்களுக்காக தான்” என்றார்.




இதனை தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், “தமிழகத்தில் 21 மாநகராட்சி 63 நகராட்சிகளில் புதிதாக 708 மருத்துவமனைகளை திறப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை செய்ய உள்ளோம். மேலும் 25 ஆரம்பர மற்றும் நகர்புற சுகாதர நிலையங்களை திறக்க முதல்வர் சமீபத்தில் அறிவித்து இருந்தார். அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் கேட்க உள்ளோம். தமிழகத்தில் புதிய 5 மருந்து கிடங்குகள் கட்ட முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. மேலும் மருத்துவ துறையில்  4307 காலி பணியிடங்கள் என கண்டறியப்பட்டு  செவிலியர்களை நியமனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். இதில் தற்போது 1021 பேருக்கு கலந்தாய்வு நடத்தி உள்ளோம். இரண்டே மாதாத்தில் காலியாக உள்ள செவிலியர்கள் பணி நிரப்பப்படும்” என்றார். 2009இல் மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த அரசானை வெளியிட்ட திமுக அரசு அதனை செயல்படுத்துமா என்கிற கேள்விக்கு? தமிழகத்தில் மருத்துவர்களுக்கு சம்பளம் உயர்த்தி தரவேண்டும் என்கிற கோரிக்கையை பொறுத்த வரை இரண்டு தரப்பிலான மருத்துவ சங்கங்கள் வெவ்வேறு விதமான கோரிக்கையை முன் வைக்கின்றனர். இது தொடர்பாக 18 முறை இரண்டு சங்கங்களையும் அழைத்து பேசி உள்ளோம். விரைவில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு அதற்கான முடிவு எட்டப்படும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார். 


Traffic Rules Fine: அன்று அவ்வளவு.. இன்று இவ்வளவு.. புதிய கட்டண விதிமுறைகளும், அபராதமும்.. முழு விவரம்!