திருச்சியில் துணை போக்குவரத்து ஆணையராக பணிபுரிந்து வருபவர் அழகரசு. இவர் கடந்த இரண்டு வருடமாக திருச்சி,  பிராட்டியூர், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் துணை போக்குவரத்து ஆணையராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும், திருச்சியில் பிராட்டியூர், ஸ்ரீரங்கம், சஞ்சீவி நகர் மற்றும் பறக்கும் படை உட்பட எட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 14 பகுதி மோட்டார் வாகன அலுவலகங்களும் இவரது கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இவர் திருவண்ணாமலையில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்த காலத்தில் தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சுமார் 2 கோடிக்கும் மேல் சொத்து குவித்ததாக கடந்த 2018 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.


 






 



இந்நிலையில் அவர்  மாவட்ட துணை போக்குவரத்து ஆணையராக பதவி உயர்வு பெற்று திருச்சிக்கு மாறுதல் ஆகி வந்தார். தற்போது மீண்டும் அவர் மீது இதே புகார் எழுந்ததை தொடர்ந்து திருச்சி வில்லியம்ஸ் சாலையில், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அழகரசு வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.




இந்த சோதனை இன்று காலை 6 மணிக்கு துவங்கிய அதிரடி சோதனையானது தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்தை தொடர்ந்து தீவிர விசாரனையில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.