Tamil Nadu Traffic Rules and Fines 2022: தமிழ்நாட்டில் மோட்டார் வாகன சட்டத்தின் திருத்தப்பட புதிய விதிமுறையானது வருகிற 28ம் தேதி முதல் அபராதத் தொகை வசூலிக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்திருந்தது. இந்தநிலையில், தற்போது இந்த புதிய விதிமுறை இன்று முதலே அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி, இன்று சென்னையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவருக்கு ரூ. 1000 வசூலிக்கப்பட்டது. இதுபோல், எந்தெந்த தவறுகளுக்கு எவ்வளவு வசூலிக்கப்படும், பழைய வசூல்தொகை என்ன என்பதை முழுமையாக காணலாம். 

குற்றத்தின் தன்மை குற்ற பிரிவு 

பழைய விதிமுறை

(முதல் தடவை)

பழைய விதிமுறை

(இரண்டாம் முறை)

புதிய விதிமுறை

(முதல் தடவை)

புதிய விதிமுறை

(இரண்டாம் முறை)

ஓவர் ஸ்பீடு  183 (1) (i)       400     1000     1000       -
சிக்னல் மதிக்காமல் கடப்பது   177     100 300 500 1500
செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல் 184 1000 1000 1000 10,000
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல்  185 2000 - 10,000 -
ஓவர் லோடு (வணிக வாகனம்) 194  2000 - 20,000 -
சரக்கு வாகனத்தில் நபர்களை ஏற்றி செல்லுதல் 177 100 300 500 1500
ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் 

177

புதியது 194(டி)

100 300 1000 -
சீட்பெல்ட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் 

177

புதியது 194(பி) 1

100 300 1000 -
சாலையில் ரேஸ் செல்லுதல் 189 500 500 5000 10000
படியில் தொங்குதல்          
1. டிரைவர் மீது  177 100 300 500 1500
2. பயணி மீது  177 100 300 500 1500
நோ எண்ட்ரி 

199/177

 

 100 300 500 1500

 

  • மியூசிக்கல் ஹார்ன், ஏர் ஹார்ன் –ரூபாய் 500 வரை
  • வாகன பதிவு இல்லாமல் வாகனம் இயக்குவது – ரூபாய் 2500 முதல் ரூபாய் 5 ஆயிரம் வரை
  • லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் இயக்குவது – ரூபாய் 5 ஆயிரம்
  • போன் பேசிக்கொண்டே வாகனங்கள் இயக்குவது- முதல் முறை ரூபாய் 1000, ஒரு முறைக்கு மேல் ரூபாய் 10 ஆயிரம்
  • கார் மற்றும் கனரக வாகனங்களில் காற்று மாசு – ரூபாய் 10 ஆயிரம்
  • 2 சக்கர வாகனங்களில் இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டுவது – ரூபாய் 2 ஆயிரம் முதல் ரூபாய் 4 ஆயிரம் வரை
  • ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனம் ஓட்டுவது – ரூபாய் 500
  • பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாமல் செல்வது – ரூபாய் 500
  • மது குடித்து வாகனம் ஓட்டுவது – ரூபாய் 10 ஆயிரம்

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த புதிய அபராதம் இன்று முதல் வசூலிக்கப்பட்டு வருகிறது.