திருச்சி  மாவட்டத்தில், கடந்த 24 மணிநேரத்தில் 66 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,354 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 69 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 72797 -ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் திருச்சி  மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1007 இருக்கிறது. இந்நிலையில் 550 நபர்கள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் திருச்சியை  சுற்றியுள்ள தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், நாகை ஆகிய இடங்களில் நிலவரத்தைப் பார்க்கலாம்.




தஞ்சாவூர்  மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 98 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70864-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 112 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 69,031-ஆக அதிகரித்துள்ளது. இன்று 3 பேர் உயிரிழந்துள்ளார். இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 889-ஆக  இருக்கிறது. இந்நிலையில் 944 நபர்கள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




பெரம்பலூர்  மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 9 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,707-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 5 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 11,405 -ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை.  இதனால் பெரம்பலூர்  மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 230-ஆக இருக்கிறது. இந்நிலையில் 72  நபர்கள் கொரோனா பாதிப்பால்  மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




அரியலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 13 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை16346 -ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 20 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 15936-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு இல்லை. அரியலூர்  மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 247-ஆக இருக்கிறது. இந்நிலையில் 163 கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  24 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19668-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 35 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 18995-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை. இதனால் நாகப்பட்டினம்  மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 304 இருக்கிறது.


இந்நிலையில் 369 நபர்கள் கொரோனா பாதிப்பால் நாகப்பட்டினத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டுமென்றால் அரசு கூறிய விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் .குறிப்பாக முகக்கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மேலும் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவேண்டும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசியை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், அனைவரும் தானாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் ,என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.