பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - மேலாண் இயக்குநர் மோகன்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ( கும்ப)லிட் கும்பகோணம் சார்பாக சிறப்பு பேருந்து இயக்கபடும் என மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ( கும்ப)லிட் கும்பகோணம், மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்டு செய்தி குறிப்பில் தெரிவித்து இருந்தது.. வரும் (15.01.2024) திங்கள்கிழமை பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்: லிட் கும்பகோணம் கழகம் சார்பில் (11.01.2024 - வியாழக்கிழமை) முதல் (14.01.2024 - ஞாயிற்றுக்கிழமை) வரை பொதுமக்கள் பயணம் செய்ய கூடுதலாக சிறப்பு பேருந்துகள் சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இயக்கப்பட உள்ளது.

Continues below advertisement


மேலும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் தேவைக்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் (11.01.2024) முதல் (14.01.2024) வரை சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் (MEPZ) அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும், கரூர், திருச்சி அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.


மேலும், பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல (16.01.2024) (17.01.2024) & (18.01.2024) ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கலுக்கு முன் (10.01.2024) to (14.01.2024) நாட்களில் சென்ணையிலிருந்து மேற்படி இடங்களுக்கு 1850 சிறப்பு பேருந்துகளும், கோவை திருப்பூர், மதுரை, திருச்சி தஞ்சாவூர், புதுக்கோட்டை ராமநாதபுரம். காரைக்குடி தடங்களில் 1295 சிறப்பு பேருந்துகளும், அதேபோன்று பொங்கலுக்கு பின் (16.01.2024) to 8.012024 நாட்களில் அவரவர் ஊர்களுக்கு திரும்பிச் செல்ல சென்னை தடத்தில் 1460 சிறப்பு பேருந்துகளும் பிற தடங்களில் 1151 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. மேலும், அனைத்து ஊர்களின் பேருந்து நிலையங்களிலும், பேருந்து நிலையத்திலும் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சேவை மையங்களில் சிறப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிய உள்ளனர்.


மேற்குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் பயணிகள் வசதிக்காக ஒலிபெருக்கி மூலம் பேருந்து இயக்கம் குறித்து தொடர்ந்து ஒலிப்பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகும் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்த்து எவ்வித சிரமம் இன்றி பயணிக்க மொபைல் ஆப் TNSTC (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள் பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola