தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எங்கெல்லாம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
செங்கல்பட்டு, திருவண்ணாமலை, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை காரணமாக இன்று நடைபெறவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் மீண்டும் எப்போது நடக்கும் என்ற விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
கொட்டித்தீர்த்த கனமழை விபரங்கள்
வானிலை ஆய்வு மையம் கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே எச்சரித்தது. இதன் அடிப்படையில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. நேற்று மாலையில் பெய்துவரும் கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் 21.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கும்பகோணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 செ.மீ மழை பெய்துள்ளது. மரக்காணம் - 13 செ.மீ, புதுச்சேரி, காரைக்கால், கடலூர் மற்றும் எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் தலா 9 செ.மீ, கொள்ளிடம் - 18 செ.மீ, மயிலாடுதுறை - 10, மணல்மேடு - 11 செ.மீ, நாகை - 16 செ.மீ, வானூர் - 12 செ.மீ, விழுப்புரம் - 8.5 செ.மீ, திண்டிவனத்தில் - 7 செ.மீ அளவு மழை பெய்துள்ளது. அதேபோல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ மழை பெய்துள்ளது