சீட்டுப்பணத்தை ஏமாற்றிய நபரை சிறைப்பிடித்த பெண்களால் பரபரப்பு 


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் பள்ளிகூடத் தெருவில் வசிப்பவர் முருகன் வயது  (38). நடிகர் விஜய் தொடங்கிய தமிழர் வெற்றிக் கழகத்தின் ஆரணி தொகுதி தலைவராக  உள்ளார். இவரது மனைவி ஆனந்த வள்ளி 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆனந்தவள்ளி உயிருடன் இருந்தபோது ரூ.1 லட்சம் , ரூ.2 லட்சம் , ரூ.5 லட்சம் என சிட்டு நடத்தி வந்துள்ளார். இதில் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த பலபெண்கள் அவரிடம் பணம் கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஆனந்த் வள்ளி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். அதன் பின் அவர் கணவரும் முருகன் மாதச் சீட்டு நடத்தி வந்துள்ளார்.  இவரும் மூன்று ஆண்டுக்கு முன்பு சீட்டு எடுத்தவர்களுக்கு இதுவரையில் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆத்திரமடைந்து முருகன் வீட்டை முற்றுகையிட்டு பணம் கேட்டு உள்ளனர். ஆனால் சில மாதங்களில் எல்லாருக்கும் பணம் கொடுக்க போவதாக முருகன் கூறியுள்ளார். இருந்த போதிலும் முருகனால்  பணத்தை தர முடியவில்லை.


 




 


முருகனை வீட்டில் வைத்து சிறைபிடிப்பு 


அதனை தொடர்ந்து முருகன் தனது தாய் மற்றும் மகன்களுடன் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது  அவரிடம் சீட்டுக்கட்டி பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அதிகாலையில் திரண்டு  முருகன் வீட்டை மீண்டும் முற்றுகையிட்டனர். வீட்டினுள் முருகன் உட்பட நான்கு பேர்  வீட்டின் உள்ளே தூங்கி கொண்டு இருந்தவர்களை  சிறை பிடித்து தங்கள் கொண்டு வந்த ஏழு பூட்டுகளை போட்டு கதவினை பூட்டினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆரணி நகர காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பூட்டை திறந்து முருகன் உட்பட நான்கு பேரையும் காவல்துறையினர் மீட்டனர்.  சீட்டுக்கட்டி பணம் வராமல் பாதிக்கப்பட்ட காமாட்சி, செல்வி, வடிவு, ஈஸ்வரி, கவிதா, அமுதா, ரத்தினம், ரேவதி, விஜயா, இந்திரா, ஜெயலட்சுமி உட்பட  15 நபர்கள்  ஆரணி நகர காவல் நிலைய ஆய்வாளர் விநாயகமூர்த்தியிடம் மனுவை அளித்தனர். 




 


முருகன் விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டார் 


அப்போது அவர்கள், “நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தின் தொகுதி தலைவர் முருகன் சீட்டுப்பணம் ரூ.15 லட்சம் தராமல் ஏமாற்றி வருகிறார். இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும்” என்றார். இதுகுறித்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் நீங்கள் புகார் கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறி அவர்களை  ஆய்வாளர் அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து திருவண்ணாமலை விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் பாரதியிடம் பேசுகையில், ஆரணி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அவரை விஜயின் ரசிகர் மன்ற பதவியில் இருந்து எடுத்து விட்டதாகவும் தற்போது அவர் எந்த பொறுப்பிலும் இல்லை என அவர் தெரிவித்தார்.