சென்னை மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும்  வெயிலின் தாக்குதல் கொடூரமாக இருந்து வருகிறது. இது மே மாதம் என்பதால் பெரும்பாலான குழந்தைகளுக்கு இது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கோடை விடுமுறையை அனுபவிக்கவும், வெயிலின் தாக்கத்தில் இருந்து தவிர்க்கவும் கொடைக்கானல், ஊட்டி போன்ற குளிர் சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்புவது இயல்பான ஒன்றே. அந்த வகையில் தற்போது சுற்றுலா தலங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர்.


DC vs RR LIVE Score: சொந்த மண்ணில் களமிறங்கும் டெல்லி; டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!




கோடை விடுமுறை:


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மே மாதம் வெயில் மற்ற மாதங்களை காட்டிலும் மிக அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவே, தமி்ழ்நாட்டில் பள்ளிகளுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை காலம் தொடங்கி விட்டதால் பல குடும்பங்களும் தங்களது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல தொடங்கி வருகின்றனர்.


இந்த நிலையில் கொடைக்கானலுக்கு செல்ல சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.  இதனை அடுத்து கொடைக்கானல் செல்லும் கூட்டத்தை கட்டுபடுத்திடவும் ,போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் தமிழக அரசு நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம் இ பாஸ் நடைமுறை கொண்டு வந்துள்ள நிலையில், இன்று முதல் அமலுக்கு வந்தது.


12th Supplementary Exam: பிளஸ் 2 துணைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?




சுற்றுலா பயணிகள் வந்த வாகனம் விபத்துக்குள்ளானது


சிதம்பரம் கடலூர் , நெய்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து இன்று சுற்றுலா வந்த 20க்கும் மேற்பட்டோர் கொடைக்கானலை சுற்றி பார்த்துவிட்டு பழனி வழியாக வந்து கொண்டிருந்தபோது பழனியில் இருந்து ஐந்தாவது கொண்டை ஊசி வளைவு அருகே வேன் வளைவில் திரும்பும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.  இதில் வேனில் பயணித்த 20 பேரில் 15 பேர் காயமடைந்தனர் , இதில் ஒருவருக்கு மட்டும் கை முறிவு ஏறபட்டது. இதில் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ்  மூலம் மீட்டு  பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.