கங்கைகொண்டான் ரயில் நிலையத்தில் பெட்டக போக்குவரத்து துவக்கம் உள்ளூர் தயாரிப்பான சோலார் பேனல்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சோலார் பேனல் செல்லும் பகுதியிலும் சமூக, பொருளாதார, தொழில் வளர்ச்சி ஏற்பட வாய்ப்பாக அமைகிறது. உள்ளூரில் புதிய வேலை வாய்ப்புகள் அமையவும், உள்ளூர் தொழிலாளர்களின் பொருளாதார வசதி மேம்படவும் வாய்ப்பு ஏற்படுகிறது.


MADURAI DIVISION - COMMENCES CONTAINER TRAIN OPERATIONS AT GANGAIKONDAN STATION


திருநெல்வேலி கங்கைகொண்டார் ரயில் நிலையத்தில் கண்டெய்னர் மூலம் சரக்குகள் அனுப்பப்படும் பெட்டக போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்டான் சிப்காட்டில் தயாராகும் சோலார் பேனல்கள் பெட்டக ரயில்கள் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கங்கைகொண்டான் ரயில் நிலையத்திலிருந்து 3.5 கி.மீ. தூரத்தில் உள்ள சிப்காட்டில் டாடா சோலார் பவர் நிறுவனம் பெரிய அளவில் சோலார் பேனல்கள் தயாரித்து வருகிறது. இந்த சோலார் பேனல்கள் பெட்டக ரயில் மூலம் அனுப்பப்பட இருக்கிறது. இதன் மூலம் ரயில்வே துறைக்கு கூடுதல் சரக்கு போக்குவரத்து வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிதி ஆண்டில் 3.410 மில்லியன் டன் சோலார் பேனல்கள் பெட்டக ரயில்கள் மூலம் அனுப்பப்பட இருக்கிறது.


- Lubber Pandhu Movie: நாங்க எதிர்பாத்ததை விட, இது சூப்பர்.. லப்பர் பந்து படக்குழு நெகிழ்ச்சி..


The introduction of container train loading at Gangaikondan Station marks a significant milestone for Madurai Division


இந்த புதிய போக்குவரத்தின் மூலம் மதுரை கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதைகள் சரியாக பயன்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ரயில் பாதைகள், ரயில் நிலையங்கள், சரக்கு ரயில் பெட்டகங்கள் ஆகியவற்றையும் சரியான முறையில் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது. இந்தப் பகுதியிலும் சோலார் பேனல் செல்லும் பகுதியிலும் சமூக, பொருளாதார, தொழில் வளர்ச்சி ஏற்பட வாய்ப்பாக அமைகிறது. உள்ளூரில் புதிய வேலை வாய்ப்புகள் அமையவும், உள்ளூர் தொழிலாளர்களின் பொருளாதார வசதி மேம்படவும் வாய்ப்பு ஏற்படுகிறது.


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Scholarship: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை 2 மடங்கு உயர்வு: தமிழக அரசு உத்தரவு- விவரம்!


இதைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - "அரசியலுக்காக கடவுள் பெயர பயன்படுத்துறதா" திருப்பதி லட்டு விவகாரம்.. ஜெகன் மோகன் பதிலடி!