சேலம் மாநகர் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் லப்பர் பந்து படக்குழுவினர் ரசிகர்களை சந்தித்தனர். லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன், நடிகர்கள் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், நடிகைகள் சௌஷ்விதா, சஞ்சனா ஆகியோர் ரசிகர்கள் முன்னிலையில் கலந்துரையாடினர்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லப்பர் பந்து படக்குழுவினர், "ஊடகத்தின் மூலமாகத்தான் படம் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது. நாங்கள் பல இடத்திற்கு சென்றோம் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் படத்தை பார்க்கிறார்கள். தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாணி படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என தோன்றியது. இருவரிடத்திலும் கேட்டேன் இருவரும் ஒப்புக்கொண்டனர். நடிகர் தினேஷிடம் கேட்கும்போது வயதான கதாபாத்திரம் என்பதால் தயக்க பட்டேன். அவருக்கு பிடித்ததற்கு காரணம் நானும் அவரும் விஜயகாந்த் ரசிகர்கள் என்பதால் படத்தில் நடித்த சம்மதித்தார். கதைக்காக மட்டுமே இளம் கதாநாயகர்களை தேர்வு செய்தேன்" என்று இயக்குனர் தமிழரசன் கூறினார்.



திரையரங்குகள் போதுமான அளவு கிடைத்தது. படம் வெளியாகிய நாள் முதல் படிப்படியாக திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று ஹரிஷ் கல்யாண் தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய அட்டகத்தி தினேஷ், நீண்ட நாட்களுக்கு பிறகு நிறைவான படமாக லப்பர் பந்து திரைப்படம் அமைந்துள்ளது. எனக்கு மட்டுமல்லாமல், ஹரிஷ் கல்யாண், நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர் என அனைவருக்கும் நல்ல படமாக அமைந்துள்ளது. ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. இந்த பெருமை நம்மை மட்டும் அடையாமல் பணியாற்றிய அனைவருக்கும் சென்றடையும் போது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் சினிமாவில் இது போன்ற நல்ல படங்கள் வரவேண்டும். இயக்குனர் தமிழரசன் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர் என்றார். மேலும் சமீபத்தில் வரப்படங்களில் பழைய பாடல்கள் இடம் பெறுவது குறித்த கேள்விக்கு, இந்த படத்தில் தேவை இருப்பதால் மட்டுமே பழைய பாடல்களை பயன்படுத்தினோம். எந்த இடத்திலும் திணிக்கவில்லை. இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படமாக அமைந்துள்ளது என்று கூறினார். 



அனைத்து விமர்சனங்களும் நல்லவிதமாக வந்துள்ளது. அதற்காக அனைவருக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் படத்தை மூன்று நாட்களில் வெற்றி பெற செய்தது ஊடகத்தின் பங்கு மிகப் பெரியது. துணை இயக்குனராக பணியாற்றி தற்போது இயக்குனராக முதல் படத்தில் வெற்றி பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த கதை பற்றி இன்னும் யோசிக்கவில்லை. தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் பற்றி ரசிகர்கள் தான் கூற வேண்டும் என்று இயக்குனர் கூறினார். 


தொடர்ந்து நடிகைகள் கூறுகையில், லப்பர் பந்து திரைப்படத்தின் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் எங்களால் இந்த வெற்றியை நம்ப முடியவில்லை. ரசிகர்களின் வரவேற்பு நாங்கள் எதிர்பார்த்ததை விட வரவேற்பு தந்துள்ளனர். அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். எல்லா வயதினரையும் கொண்டாடி வருகின்றனர். இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் அனைத்து தரப்பு மக்களிடத்திலும் படம் சென்றடைய வேண்டும். இது போன்ற சிறந்த படத்தில் நடித்தது புது அனுபவமாக இருந்தது என்று கூறினார்.