ரேசன் அரிசி கடத்தப்படுவதாக தகவல்:


குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. களியக்காவிளை வழியாக ரேசன் அரிசி கடத்தப்படுவதாக களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.




இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் முத்து குமரன் தலைமையிலான போலீசார், ஒற்றாமரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கூண்டு கட்டி வந்த டெம்போ வண்டியை தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் டெம்போவை, டிரைவர் நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். உடனே போலீசார் டெம்போவை பின் தொடர்ந்து துரத்தினார்கள். 


கடத்தல்காரர்கள் கைது:


சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று கோழிவிளை பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். அப்போது டெம்போவில் இருந்த சிதறால் பகுதியைச் சேர்ந்த ஜெவின் (வயது 29) குளப்புரம் பகுதியை சேர்ந்த சுஜின் (26) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து டெம்போவை சோதனை செய்தபோது ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்வதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் டெம்போவையும், கைது செய்யப்பட்ட இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.


Ration Rice Smuggling: ரேசன் அரிசி கடத்தலை தடுக்க 2 மாநில போலீசார் கூட்டு முயற்சி - கடத்தலை தடுக்க விரைவில் தனிப்படை


விசாரணை:


பின்னர் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் கைது செய்யப்பட்ட இருவரையும் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 8 டன் ரேசன் அரிசியையும் காப்புக்காடு குடோனில் ஒப்படைத்தனர். இது எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 


இதே போல் குளச்சல் சப் இன்ஸ்பெக்டர் மோகன் சிறப்பு இன்ஸ்பெக்டர் அலுவலரசு, போலீஸ் ஏட்டு வசந்த ஆகியோர் குளச்சல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. ரேசன் அரிசியை கடைத்திருந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Also Read: திண்டிவனத்தில் வழக்கறிஞர் கடத்தல்: வழக்கறிஞர்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு


'நீ செத்துப்போயிட்ட உனக்கு அரிசி இல்ல' - கடலாடி அருகே ரேசன் கடைக்கு சென்ற மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி.!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண