நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த தெற்கு வாகைக்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் 40 - ராமலெட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 15 வயதில் மகன் மற்றும் 8 வயதில் மகளும் உள்ளனர். இந்த சூழலில் கல்யாணசுந்தரம் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்து உள்ளார். மனைவி மற்றும் பிள்ளைகளுடன் திருப்பூரில் வசித்து வந்த நிலையில் பிள்ளைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான நெல்லை தெற்கு வாகைக்குளத்திற்கு குடும்பத்துடன் வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று ராமலெட்சுமி அவரது வீட்டில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மானூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராமலெட்சுமியின் நடத்தை சரியில்லாததால் கல்யாண சுந்தரம் அவரை அடிக்கடி கண்டித்து வந்ததாகவும், இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
திருப்பூரில் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் குடும்பத்துடன் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சொந்த ஊரான மானூர் வந்துள்ளார். இங்கு வந்த இடத்திலும் இன்று மீண்டும் சண்டை போட்டுள்ளனர். அப்போது ஆத்திரத்தில் கல்யாணசுந்தரம் வீட்டில் இருந்த அரிவளால் ராமலெட்சுமியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார். முன்னதாக ராமலெட்சுமியின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் கல்யாண சுந்தரம் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்ததாகவும் அதனை ராமலெட்சுமியின் தந்தை பாலகிருஷ்ணன் தலையிட்டு பிரச்சினை தீர்த்து வைத்ததாகவும் கூறப்படுகிறது, மேலும் ராமலெட்சுமியின் மீது சந்தேகப்பட்டு இன்று கல்யாண சுந்தரம் ராமலெட்சுமியை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தப்பியோடிய கல்யாணசுந்தரத்தை காவல்துறையினர் கைது செய்து நீதிமனற காவலுக்குட்படுத்தி சிறையில் அடைத்தனர். குடும்பத் தகராறில் கணவனே மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்