திருச்செந்தூர் கடல் பகுதி கரையில் இருந்து சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியுள்ளது. ஆபத்தை உணராமல் பக்தர்கள் சிறியவர்கள், பெரியவர்கள், என கடலில் தூரமாக சென்று குளித்து வருகின்றனர். கோயில் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலமாக பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.
திருச்செந்தூர் ஆறு படை வீடு இரண்டாம் படை வீடானது. இங்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்பவார்கள். இந்நிலையில் இன்று அய்யா வைகுண்டர் கோயில் அருகே சுமார் கடல் ஆனது சுமார் ஒரு 100 அடி உள்வாங்கி காணப்பட்டது.
தென் கடலோர பகுதியில் கடந்த இரண்டு வார காலமாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட கடல் அலை சீற்றத்தின் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு குழந்தை மற்றும் பயிற்சி மருத்துவ மாணவ, மாணவியர்கள் உயிரிழந்தனர். இப்படி மனித உயிரை பழிவாங்கும் வகையில் கடந்த ஒரு வார காலமாக மேலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் திருச்செந்தூர் கோவில் கடல் பகுதி சுமார் 100 அடி தூரம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. கடலில் உள்ள பாறை திட்டுக்கள் அனைத்தும் வெளியே தெரிகின்றன. கடலில் உள்புறம் இருந்த பாசி படலங்கள் படர்ந்து காணப்படுகிறது. இப்படி ஒரு ஆபத்தான நிலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்துள்ள பக்தர்கள் கடல் உள்வாங்கி உள்ள பகுதியை தாண்டி ஆழ்கடல் பகுதிக்கு சென்று குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
கடல் உள்வாங்கி இருப்பதால் பாறைகள் அதிகமான வெளியே தெரிகிறது. பக்தர்கள் பாறையில் அமர்ந்திருந்து குடும்பத்துடன் குளித்து வருகிறார்கள். சிலர் பாறைகளில் இருந்து செல்பி போட்டோ எடுத்து வருகிறார்கள். இதில் சிறியவர்கள் வரை பெரியவர்கள் வரை பாறையில் உட்கார்ந்து குளித்து வருகிறார்கள்.
ஆபத்துக்களை உணராத இந்த பக்தர்களை காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர். இருந்த போதும் இந்த பக்தர்கள் காவல்துறையினர் எச்சரிக்கைக்கு செவிமடுக்காது கடலுக்கு உள்ளே சென்று குளித்தும், ஓடி விளையாடியும் வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்செந்தூர் கோவிலில் இன்று கிருத்திகை, வியாழக்கிழமை, என்பதாலும் விடுமுறை காலம் என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். பக்தர்கள் பால்குடம், பாதயாத்திரை, சுவாமிக்கு நெற்றிக்கடன் செலுத்தி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் கோயிலை சுற்றிலும் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது. பொதுவாக அமாவாசை, பெளர்ணமி தினங்களில் கடல் உள்வாங்கும் என்பது குறிப்பிடத்தக்கது