விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியை தனது மூச்சுக்காற்று உள்ள வரை அன்புமணி ராமதாசுக்கு வழங்கமாட்டேன் என்றும் தனக்கு கட்டளையிடும் அதிகாரத்தினை அன்புமணிக்கு வழங்கவில்லை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.,
அன்புமணியின் செயல்பாடுகளை பார்க்கும் போது தன்னுடைய மூச்சு காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்க மாட்டேன் என்றும் பாமக கட்சியை தொய்வில்லாமல் நடத்த தனக்கு ஆதரவு பெருகியுள்ளதாகவும், குடும்பத்தை சார்ந்தவர்கள் அரசியலுக்கு வர கூடாது என கட்சி ஆரம்பிக்கும் போது கூறினேன் அதனை காப்பாற்ற முடியவில்லை என வேதனை தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய ராமதாஸ், கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதின் பேரில் சுகாதார துறை அமைச்சர் பதவி அன்புமணிக்கு வழங்கப்பட்டதாகவும் இரண்டரை ஆண்டுகளுக்கு பின் அப்பகுதியில் தொடர முடியாது என அன்புமணி தெரிவித்த போது தினம் தினம் அன்புமணியிடம் சமாதானம் செய்து அறிவுரைகள் வழங்கி மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்க வைத்ததாக கூறினார். பெற்ற பிள்ளைகள் தந்தை, தாயை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும்.
இதை அன்புமணியிடம் கூறினால் மகிழ்ச்சியாக வைத்திருக்கேன் என கூறுவார். ஆனால் மைக்கை தூக்கி அடிக்கிறார். பாட்டிலை எடுத்து தாயை அடிப்பதாக குற்றம்சாட்டினார். தனி ஒரு மனிதனாக 96 ஆராயிரம் கிராமங்களுக்கு இரவு பகலாக சென்று பாமக கட்சியை வளர்க்க பாடுபட்டதாகவும், அன்புமணிக்கு தலைவர் பதவி வழங்க மாட்டேன் செயல்தலைவராக அவர் செயல்பட வேண்டும் அய்யா உத்தரவு படி செயல்தலைவராக அல்லது அடிமட்ட தொண்டனாக செயல்படுவேன் என அன்புமணி கூறினால் தனது மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று கூறினால் அதெல்லாம் பொய் என அன்புமணி கூறுவார் என்றும் பாமகவில் உள்ள பிரச்சனைக்கு ஒரே தீர்வு செயல்தலைவராக அன்புமணி செயல்படுவேன் அய்யா சொல்லும் வழியில் நடப்பேன் என அன்புமணி கூறவேண்டும் என வலியுறுத்தினார். அன்புமணி பார்க்கும் போது அதிர்ச்சி, மனக்குமுறல்கள் ரத்தம் அழுத்தம் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
பாமகவை சுயம்புவாக உருவாக்கிய தன்னை மைக் வைத்து சேலம் தர்மபுரியில் பேச கூடாதென அன்புமணி கட்டைளையிடுகிறார். என்னை கட்டளை இட யார் இவருக்கு கட்டளையிடும் அதிகாரம் அன்புமணிக்கு கொடுக்கவில்லை என்றும் மூச்சுக்காற்று உள்ள வரை பாமகவின் நிறுவனர் தலைவராக தான் நீடிப்பேன் என்று மீண்டும் மீண்டும் அழுத்தமாக தெரிவித்த ராமதாஸ் இளைஞரனிக்கு பொருத்தமான தலைவர் போடப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.