கொடைக்கானலில் நீண்ட நாளுக்கு பிறகு சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில்,  சுற்றுலாப்பயணிகள் உற்சாகத்துடன் படகு சவாரி செய்தனர்.


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த இரண்டு மாதமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது வந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன்  காணப்பட்ட நிலையில் நண்பகல் வேளையில் திடீரென சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரவலாக நல்ல மழை பெய்தது. குறிப்பாக ஏரி சாலை,  பேருந்து நிலையம்,  மூஞ்சுக்கள், அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது திடீரென பெய்த இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது. இதனால்  பொதுமக்கள் மகிழ்சி அடைந்துள்ளனர். குறிப்பாக கொடைக்கானலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் நட்சத்திர ஏரியில் மழையில் நனைந்த படியே படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.




தேனி மாவட்டம் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மிதமான கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.




கடந்த 3 மாத காலமாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்ததால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததோடு வெப்பத்தின் தாக்கம் இரவிலும் எதிரொலித்தது. கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்யாத இருந்தது. எனவே இன்றும் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மாலை 7 மணி முதல்  பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் குள்ளப்புரம், எ.வாடிப்பட்டி, சில்வார்பட்டி, தேவதானப்பட்டி, லட்சுமிபுரம், வடுகபட்டி  உள்ளிட்ட பகுதிகளில் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விட்டு விட்டு பரவலாக மிதமான கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மிதமான கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியதோடு  வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சி நிலவியதால்  பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்