மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆச்சாள்புரம் வள்ளுவர் தெருவில் குடியிருந்தவர் லில்லிபாய். கணவனால் கைவிடப்படட்ட இவர் அரசால் குடியுரிமை வழங்கப்பட்ட பட்டா இடத்தில் தொண்டு நிறுவனம் மூலம் கட்டிகொடுக்கப்பட்ட ராஜாமணி என்பவருக்கு சொந்தமான வீட்டில் போக்கியத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து குடியிருந்து வந்துள்ளார்.


Republic Day 2022 Medals : குடியரசு தினத்திற்கான காவல்துறை பதக்கங்கள் : தமிழ்நாட்டில் யார்? யாருக்கு? முழு விவரம் உள்ளே




இந்நிலையில் அந்த வீட்டை தன்னிடம் விற்பதாக கூறியிருந்த ராஜாமணி செல்வம் என்பவருக்கு விற்றதால், ராஜாமணி உதவியுடன் செல்வம் மற்றும் அவரது  உறவினர்கள் வெங்கடாச்சலம், கலியபெருமாள் மற்றும் சிலர் தன்னை வீட்டைவிட்டு வெளியே தள்ளி பூட்டிவிட்டதாகவும், வீட்டில் உள்ள நகை, பணம் உள்ளிட்டவைகளை தனது உடமைகளையும், பொருட்களை எடுக்கவிடாமல் மிரட்டி தன்னை துரத்தி விட்டதாகவும், வீடு உள்ளவர்கள் அரசை ஏமாற்றி பட்டா பெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தான் கொடுத்த போக்கிய பணத்தை திரும்ப பெற்று தனக்கு நியாயம் வழங்கும்படி ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலையம், மாவட்டகாவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலமைச்சர் தனிபிரிவு ஆகியோருக்கு புகார்மனு அளித்துள்ளார். 


NASA Webb Telescope: பூமியில் இருந்து ஒன்றரை மில்லியன் கிலோமீட்டர்.. சுற்றுவட்ட பாதையை அடைந்தது ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்..




இந்நிலையில் தன் பிரச்சனைக்கு உரிய தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், அது வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுப்பட போவதாக கூறி தனது உடை உள்ளிட்ட துணிமணிகள் அடங்கிய பையுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர்  முறைகேடாக ஆச்சாள்புரத்தில் வீடு உள்ளவர்களுக்கு குடியுரிமை பட்டா வழங்கியுள்ளதை திரும்பபெற வேண்டும், தான் போக்கியத்திற்கு கொடுத்த பணத்தையும் வீட்டில் உள்ள பொருட்களையும் மீட்டுதர வேண்டும், நிர்கதியாக உள்ள தனக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Shilpa Shetty | 2007-ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஆபாச நடத்தை வழக்கு.. விடுவிக்கப்பட்டார் ஷில்பா ஷெட்டி..




தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரும், வருவாய்துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்ட லில்லிபாயிடம் பேச்சவார்த்தை நடத்தி, சீர்காழி வட்டாட்சியர் சண்முகம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்று கூறி சமாதானம் செய்து சீர்காழிக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து பெண் ஒருவர் குடியேறும் போராட்டத்தில் ஈடுப்பட நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.