நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் பகுதியில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஒ.என்.ஜி.சி நிறுவனத்தின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.  அங்கு, ராமநாதபுரம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கொலப்பாடு, கமலாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கடல் நீரை விட 10 மடங்கு உவர்ப்பு தன்மை கொண்ட கெட்ட உப்பு நீர் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவரப்படுகிறது. கொண்டுவரப்படும் கெட்ட உப்பு நீர் 1800 மீட்டர் அளவில் ராட்சத போர்வெல் மூலம் பூமிக்கடியில் செலுத்தப்படுகிறது.




 

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- சொத்து விவரங்களை மறைத்ததாக ஓபிஎஸ், ஓபிஆர் மீது தொடரப்பட்ட வழக்கு - ஆவணங்களை சரி பார்க்கும் பணிகள் தீவிரம்

இதனால், கோபுராஜபுரம், நரிமணம், குத்தாலம், திட்டசேரி, எராவான்சேரி, உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாரியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மூன்று நான்கு கிலோ மீட்டர் தூரம் சென்று இரு சக்கர வாகனம் மூலமாகவும் நடைப் பயணமாகவும் குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக வேதனை தீர்க்கும் கிராம மக்கள் விவசாய நிலமும் மதித்து உள்ளதாக தங்கள் பகுதியில் போர்வெல் நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்கள் பகுதியில் போர்வெல் நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் நிர்வாகம் மூலமாக கொடுக்கப்படும் நீரும் சுகாதாரம் மற்றும் உள்ளதாகவும் இதனால் தோல் நோய் இளம்பிள்ளை வாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தொற்றுக்கு ஆளாகும் கவலை தெரிவிக்கின்றனர்.





 

இந்த நிலையில், நிலத்தடி நீரை மாசுபடுத்தும் ஒ.என்.ஜி.சி மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முன்பு கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாசு நீர் சுத்திகரிப்பு நிலைத்தை அகற்ற வேண்டும் என்றும், சீரான தூய்மையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிறுவனம் மற்றும் மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பெண்கள் உள்ளிட்டோர் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.