தமிழகத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
பூம்புகார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளருமான பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலையையும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்த்தி தமிழக மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள திமுக அரசை கண்டித்தும், மேலும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், பதாகைகளாக ஏந்தி கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கூட்டத்தில் கண்டன உரையாற்றிய அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பேசுகையில், திமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் அனுமதி இல்லாமல் பார்கள் செயல்படுவதாகவும், அனுமதி இல்லாமல் டாஸ்மாக் மதுபான கடைகளில் செயல்படும் பார்களை காவல்துறையினர் மூட நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனுமதி இல்லாமல் செயல்படும் டாஸ்மாக் பார்களை பெண்களுடன் சென்று அடித்து நொறுக்குவோம் என்று ஆர்ப்பாட்டம் வாயிலாக எச்சரிக்கை விடுப்பதாக தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும் விலைவாசி உயர்வை கண்டித்து முழக்கமிட்டனர்.
Meenakshi Ponnunga: வீட்டுக்கு வருமாறு வெற்றிக்கு அழைப்பு விடுத்த மீனாட்சி..சக்தியின் எண்ணம் மாறுமா?
இதேபோல் சீர்காழியில் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்த்தி பொது மக்களை பெரும் துயரத்திற்கு ஆளாக்கி வரும் நிலையில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்பாட்டத்தில் சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.வி. பாரதி மற்றும் ம.சக்தி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி கொள்ளிடம் ஒன்றிய நகர அதிமுக பொருப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் 500 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, திமுக அரசை கண்டித்து , திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.