உதயநிதி ஸ்டாலின் பல படங்களை தயாரித்து ஓகே ஓகே படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து காமெடி கலந்த ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த அவர், ஒரு கட்டத்திற்கு பிறகு, சமூக பிரச்சினைகளை பற்றி பேசும் படங்களில் நடித்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் எம்.எல்.ஏ வாக நின்று வெற்றி பெற்றார். தற்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். இவர் பதவியேற்கும் முன் கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்த நிலையில், பதவியேற்ற பின், கமல் ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.
கமலின் ட்வீட்
வாழ்த்துகிறேன் தம்பி. அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது என கமல் ட்வீட் செய்துள்ளார்.
ரஜினிகாந்தின் ட்வீட்
தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.
வைரமுத்துவின் கவிதை
உள்ளங்கவர் உதயநிதி!
கலைஞர் குடும்பம்
உங்களுக்குத் தந்தது
அறிமுகம் மட்டும்தான்
இன்னொரு முகம் இருக்கிறது;
அறிவு முகம்;
செயலால் மட்டுமே அடைவது
உங்கள் செயலால்
வாரிசு என்ற
வசை கழியுங்கள்
தளபதி மகனே வருக
தமிழர்க்கு மேன்மை தருக
அமைச்சர் உதயநிதிக்கு
வாழ்த்துக்கள்
சந்தானத்தின் ட்வீட்
நம்ம இன்னும் நிறைய கோப்பைகளும் பந்தையங்களும் போட்டிகளும் உலக மேடையில ஜெயிக்கனும்! இந்த கனவு இனி தமிழ்நாட்டுல நனவாக வாழ்த்துகள் முதலாளி என ட்வீட் செய்துள்ளார்
மாரி செல்வராஜின் ட்வீட்
இன்று தமிழக அமைச்சரவையில் பங்கேற்கும் எங்கள் மரியாதைக்குரிய உதயநிதி ஸ்டாலின் சார் அவர்களுக்கு வாழ்த்துக்களும் ப்ரியமும் - மாமன்னன் படக்குழு
அருள்நிதியின் ட்வீட்
தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் என ட்வீட் செய்துள்ளார்.
இசையமைப்பாளர் தரண் குமாரின் ட்வீட்
வாழ்த்துக்கள் அண்ணா என்று போட போடி படத்தின் இசையமைப்பாளர் தரண் குமார் ட்வீட் செய்துள்ளார்.
விஷ்ணு விஷாலின் ட்வீட்
வாழ்த்துக்கள உதயநிதி அண்ணா என விஷ்ணு விஷால் ட்வீட் செய்துள்ளார்.
தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியின் பதிவு
தயாரிப்பாளரும், உதயநிதியின் அண்ணனுமான தயாநிதி அழகிரி தனது இன்ஸ்டா பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த இவர், இனிமேல் படங்களில் நடிக்க போவது இல்லை என கூறியுள்ளார். இதனால் கமலின் தயாரிப்பில் இவர் நடிக்கபோகவிருந்த படம் கைவிடப்பட்டது. மாமன்னன் படமே இவர் நடித்த கடைசி படமாக அமையும் என்பது குறிப்பிடதக்கது.
சரத்குமார் ட்வீட்