தஞ்சாவூர் மாநகராட்சி அரசர் மேல் நிலைப்பள்ளி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 15-18 வயதினருக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 19,27,100 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு, இதுவரை முதல் தவணை 16,42,758 (85 சதவீதம்) நபர்களுக்கும் இரண்டாம் தவணை 10,10,703 (52.4 சதவீதம்) நபர்களுக்கும் தடுப்பூசி முகாம்கள் மற்றும் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு உத்தரவின் படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை 15 வயது முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
மேலும், இம்முகாம்கள் 15-18 வயதினர் படிக்கும் 441 பள்ளிகளில் அமைக்கப்பட்டு 1,11,400 பயனாளிகளுக்கு பள்ளி நலவாழ்வு திட்டம் மற்றும் நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலம் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் 42 மருத்துவக்குழுக்கள் நகரப்புற பகுதிகளில் 8 மருத்துவக்குழுக்கள் என மாவட்ட அளவில் மொத்தம் 50 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 8ஆம் தேதி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 441 அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் இம்முகாம்கள் அமைக்கவும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் படிக்காத 15-18 வயதினருக்கு மருத்துவக் குழுக்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி வழங்கிட பொதுசுகாதாரதுறை, கல்வித்துறை, வருவாய்துறை, உள்ளாட்சித்துறை, சமூகநலத்துறை, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் இதர அரசுத்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி 15 முதல் 18 வயதுடைய தங்களது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தவறாது செலுத்திக்கொண்டு கொரோனா தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாத்து கொள்ள வேண்டும். அனைவரும் வெளியில் வரும் போதும், பள்ளிளுக்குள் வரும் போதும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும், கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் தலைமையில், திருவிடைமருதூர் ஒன்றியம், நாச்சியார்கோவில் ஊராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 15-18 வயதினருக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார்கள். இதில் அனைத்து பள்ளி மாணவர்களும் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.
கள் போதை பொருள் அல்ல என்பது முதல்வருக்கு தெரியும் - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி