தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பாக பெய்த மழையில் நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்த நெல் மணிகள் நனைந்து முளைத்த நிலையில் போதுமான அளவு நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க கோரி கே.கே.ரமேஷ் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார் நிலையில் நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பாக இந்த வழக்கை விரைவாக விசாரிக்க கோரி கே.கே.ரமேஷ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அரசு தரப்பில் ஏற்கனவே நீதிமன்றம் இது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளது கடந்த ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து பல உத்தரவுகளை வழங்கியது அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், "ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறுகிறீர்கள். ஆனால் அதே பிரச்சனை, அதே பாதிப்பு மீண்டும் மீண்டும் எழுவது ஏன்? என கேள்வி எழுப்பினர். அடங்கலில் விவசாயிகள், விவசாய பரப்பு ஆகியவற்றை பதிவு செய்யாதது ஏன்? விவசாயிகள் தான் நெல்லை கொள்முதல் செய்ய கொண்டு வருகிறார்களா? அல்லது இடைத்தரகர்கள் கொண்டு வருகிறார்களா? என்பதே பல நேரங்களில் தெரிவதில்லை.
எந்த பிரச்சனையும் ஒரே இரவில் சரியாகிவிடாது. நெல்லை விதைக்கும் போதே இதற்கான முறையான நடவடிக்கைகளை தொடங்கலாமே? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, "அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என கூறவில்லை. எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறது. ஆனால் இன்னமும் விவாசாயிகள் பாதிக்கப்படுகிறார்களே? என கேள்வி எழுப்பினர். மேலும், நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் செல்லும் 24 மணி நேரத்திற்குள் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும். அது முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலேயே இது போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படும். ஆகவே, அதற்கான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும்" என தெரிவித்தனர்.
அரசு தரப்பில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அடங்கல் மற்றும் அவற்றில் பதிவு செய்யும் தகவல்கள் இணையவழியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டத அதற்கு நீதிபதிகள், "நெல் கொள்முதல் தொடர்பான கண்காணிப்புக் குழுவில் விதிப்படி 2 விவசாயிகள் இடம்பெற வேண்டுமே? அது போல் 2 விவசாயிகள் இடம்பெற்றுள்ளனரா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நெல்கொள்முதல் கண்காணிப்பு குழுவில் இரண்டு விவசாயிகள் இடம் பெற்றுள்ளனரா? என்பது குறித்தும் அரசு தரப்பில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, நிலுவையில் உள்ள வழக்கை அடுத்த வாரத்திற்கு பட்டியலிட உத்தரவிட்டுள்ளனர்.