உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே இங்கு சென்று பரிசோதியுங்கள்

இந்தியா முழுவதும் தொடங்கி 17/03/2025 வரை 100 நாட்களுக்கு தீவிர காசநோய் கண்டறிதல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

Continues below advertisement

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் காசநோய் கண்டறியும் முகாம் விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட கலெக்டர்  பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.

Continues below advertisement

தஞ்சாவூர் கண்டறியும் மாவட்ட முகாம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு காசநோய் வாகனங்களை மாவட்ட  கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது:

இந்தியா முழுவதும் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு காசநோய் கண்டறிதல் மற்றும் கண்டறியப்படும் காசநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்துதல் ஆகிய பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு வருடமும் காசநோயாளிகளை கண்டறிவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025 க்குள் காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

இதற்காக காசநோயாளிகளை அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்யவும் காசநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காகவும் தீவிர காசநோய் கண்டறிதல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்தியா முழுவதும் தொடங்கி 17/03/2025 வரை 100 நாட்களுக்கு தீவிர காசநோய் கண்டறிதல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட தீவிர காசநோய் கண்டறியும் முகாம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

யாருக்கேனும் இரண்டு வாரத்திற்கு மேற்பட்ட இருமல், மாலைநேரக் காய்ச்சல், சளியுடன் இரத்தம் வருதல், பசியின்மை. எடைகுறைதல் மற்றும் மார்பு விலாவில் வலி ஆகிய அறிகுறிகள் இருந்தால் முகாம் நடைபெறும் பகுதிக்கு சென்று தங்களை பரிசோதனை கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை வாகனங்களில் ஒட்டி மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

முன்னதாக காசநோயை குறித்த உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க அனைவரும் எடுத்து கொண்டனர். எனது மாவட்டத்திலிருந்து காசநோயை முழுமையாக நீக்கிடவும், பொது மக்களிடையே காசநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் முழுமூச்சுடன் பாடுபடுவேன் என்று நான் உறுதியளிக்கின்றேன். எனது மாவட்டத்தில், காசநோயால் பாதிக்கப்பட்ட நபர்களும் அவர்களது குடும்பத்தாரும் ஆரோக்கியமான வாழ்வினை உயர் தரத்துடன் பெற்றிட தேவையான எல்லா நடவடிக்கைகளையும், ஆதரவினையும் வழங்கிடுவேன் என்று நான் உளமார உறுதியளிக்கின்றேன். எனது மாவட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு நிறுவனங்கள், முக்கிய பிரதிநிதிகள் ஆகியோருடன் ஒன்றிணைந்து காசநோய்க்கான தரமான சிகிச்சையையும், ஆதரவையும் பாதிக்கப்பட்டோர்க்கு வழங்கிட விழிப்புடன் செயல்படுவேன் என்று நான் உளமார உறுதியளிக்கின்றேன்.

எனது மாவட்டத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் "காசநோய் இல்லா இந்தியா" எனும் இயக்கத்தில் கலந்து கொண்டு 'காசநோய் இல்லா இந்தியா" என்ற நிலையை விரைவில் அடைந்திட என் முழு ஒத்துழைப்பையையும் நல்கிடுவேன் என்று உறுதியளிக்கின்றேன். இவ்வாறு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இதை அதிகாரிகள் உட்பட அனைவரும் வாசித்து ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் துணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்) மரு,செல்வக்குமார், மரு மாதவி  (காசநோய்) உதவி திட்ட மேலாளர் மரு.சித்ரா, மாவட்ட திட்ட மேலாளர் ஜெனிபர், மருத்துவ அலுவலர் மரு.முகமது கலீல், உலக சுகாதார ஆலோசகர் மரு.தெய்வீகன் மற்றும் மாவட்ட காச நோய் மைய பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola