கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு 2004 டிசம்பர் 26 -ம் தேதி இதே நாளில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி எனும் பேரலை தோன்றி இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சின்ன பின்னம் ஆக்கியது. உயிர் சேதம் பொருள் சேதம் என பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் தமிழ்நாடு கேரளா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் பாதிப்பை சந்தித்தது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 7000 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கடலோர மாவட்டமான ஒருங்கிணைந்த நாகை (மயிலாடுதுறை) மாவட்டத்தில் மட்டும் 6065 பேர் பேரலையில் சிக்கி தங்கள் இன்னுயிரை நீத்தனர். அந்த நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 26 மீனவ கிராமங்களிலும் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிர் நீத்ததுடன், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். ஆழிப் பேரலை தாக்கியதன் 18ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னங்குடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் பதினெட்டாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தினர். அதேபோன்று தரங்கம்பாடி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் கடற்கரையில் கூடி யாகம் செய்து ஆழிப் பேரலையின் தாக்குதலில் உயிர் நீத்த தங்களது உறவினர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் நீராடினர்.
மீனாட்சி அகாடமி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் 16வது பட்டமளிப்பு விழா..!
தொடர்ந்து ஊர்வலமாக சென்ற மீனவர்கள் ஆழிப் பேரலை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக தரங்கம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னம் மற்றும் நினைவிடத்தில் 18 ஆண்டுகளாகியும் மறையாத சோகத்தில் பூஜைகள் செய்து அஞ்சலி செலுத்தி வழிபட்டனர். இதேபோல் சந்திரபாடி, திருமுல்லைவாசல் மீனவ மக்கள் ஊர்வலமாக வந்து நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் லலிதா, பாஜக மாவட்ட தலைவர் அகோரம், மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் தரங்கம்பாடியில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் திமுக, அதிமுக மாவட்ட செயலாளர்களும், பாஜக மாவட்ட தலைவர் என மூவரும் ஒன்றாக ஒரே நேரத்தில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.