தமிழ் சினிமாவின் குட்டி குஷ்பூ ஹன்சிகா மோத்வானிக்கும், தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதுரியாவுக்கும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமணம் சடங்குகள், சம்பிரதாயங்கள் என திருமண கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டன.
புதுமண தம்பதிகளான ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹைல் கதுரியா ஹனிமூன் கொண்டாட்டத்திற்காக கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆஸ்திரியாவுக்கு சென்றனர். அங்கு அவர்களின் பயணத்தின் போது ரதாஸ்ப்ளாட்ஸ் சதுக்கம் மற்றும் பெல்வெடெரே அரண்மனைக்கு சென்றனர். மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது விளக்குகளால் ஜொலிக்கும் ஆஸ்திரிய தலைநகரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
ஹன்சிகா பிங்க் டாப்பில் கூல்லான ஐஸ்கிரீம் போல இருக்கிறார். கணவர் சோஹைல் புகைப்படங்களை எடுக்க விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். அவர்களின் போஸ்ட் செய்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது மிகவும் ட்ரெண்டிங்காக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஹன்சிகா. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் ஹனிமூன் முடிந்து திரும்பியதும் மீண்டும் முழுவீச்சில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கூட ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் காந்தாரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.