மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டை நாதர் கோயிலில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து சட்டைநாதர் கோயில் வளாகத்தில் கும்பாபிஷேக பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்று பார்வையிட்டு, பின்னர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து பத்திரிகையாளர் சந்தித்த அவர் கூறுகையில்,
திருச்சி மாநாடு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். மேலும் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகாரம் அளித்துள்ளது குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் பிரச்சனை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதே பொதுக்குழு தான் சின்னம்மாவையும், பொதுச் செயலாளரையும், ஒருங்கிணைப்பாளரையும் தேர்ந்தெடுத்தார்கள், நீதிமன்றம் வழக்கு நடைபெற்று கொண்டுள்ளது ஆகையால் பொறுத்திருந்து பாருங்கள் என பதிலளித்தார்.
மேலும் தொடர்ந்து பேசியவர், அதிமுகவிலிருந்து யார் யாரெல்லாம் வெளியே சென்றார்களோ அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும். இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் நான் அதிமுக கொடியை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்றால் ஒன்றை கோடி தொண்டர்களும் பயன்படுத்தக் கூடாது என்று தான் அர்த்தம். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட வில்லை என தெரிவித்தார். சீர்காழி சட்டநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் அனைத்தும் தருமையாதினத்தின் பாதுகாப்பில் இருக்க அரசு நடவடிக்கை வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
Summer Fruits: மண்டையை பிளக்கும் வெயில்.. கட்டாயம் சாப்பிட வேண்டிய 5 பழங்கள் என்னென்ன?
பாராளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்து நிற்பதற்கான சாத்தியம் உண்டா என்ற கேள்விக்கு, பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் உள்ளன அதற்குள் அதிமுகவில் என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் நிகழலாம் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்