தஞ்சாவூர்: வாடகை கடைகளுக்கான 18 சத ஜிஎஸ்டி வரி உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடை வாடகை மற்றும் கட்டிடங்களுக்கு மத்திய அரசு அநியாயமாக விதித்துள்ள 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தஞ்சையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் ஆர். சூரியகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏவிஎம்.ஆனந்த், மாவட்ட பொருளாளர் ஆர்.பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் தஞ்சை மாநகரச் செயலாளர் ஆர்.ஜெயக்குமார் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் வாடகை கடை மற்றும் கட்டிடங்களுக்கான மத்திய அரசு விதித்துள்ள 18% வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும், வணிக கட்டிடங்களுக்கு ஏற்கனவே 100% வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஆண்டுதோறும் 6% சொத்து வரி விதிக்கும் உயர்வை திரும்ப பெற வேண்டும், வணிக உரிமை கட்டணம் மற்றும் தொழில் வரிகளின் உயர்வை திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாடு வணிகர்கள் மீது மத்திய அரசு திணிக்கின்ற நியாயமற்ற ஜிஎஸ்டி வரி விதிப்பை கைவிட வேண்டும், வணிகர்களிடம் சோதனை என்ற பெயரில் வருவாய்த்துறை, உணவுத்துறை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் அநியாய அபராத கட்டண வசூலை தடுத்து நிறுத்த வேண்டும், மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்களில் குப்பை வரியை மாநிலம் முழுவதும் சீராக்க வேண்டும், வணிக உரிமம் புதுப்பித்தலை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும், மாதா, மாதம் மின் கட்டணம் செலுத்தும் வசூல் முறையை கொண்டு வர வேண்டும், திருமண மண்டபங்களில் தனியார் வணிகத்தை அனுமதிக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் இரா.நந்தகுமார், கே.சண்முகராஜ், எஸ். கோவிந்தராஜ், தியாக சுந்தரமூர்த்தி, டி.தாமரைச்செல்வன், என்.வெங்கடேசன், ஏ.என்.ஜெயராமன், ஜி.குமார் இணைச்செயலாளர்கள் எம்.கந்தசாமி, தங்க.கார்த்திக், சைவ.வரதராஜன், ஆர்.ரகுபதி, ஜி பாலு, எம்.ஜி.ராஜசேகர், துணைச்செயலாளர்கள் எ.ராமலிங்கம், ஏ.பாலசுப்பிரமணியன், சிவா, கண்ணன், கே.முருகானந்தம், ரங்கராஜ், இளைஞர் அணி அமைப்பாளர்கள் மணிகண்டன், விக்னேஷ், குமார், ஜாபர் சாதிக்,முகிலன், ராமன், தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் த.ஜெயக்குமார், அலெக்ஸ்,ரமேஷ், விவேக்,தங்கம்மாள், செய்தி தொடர்பு பிரிவு நிர்வாகிகள் டாக்டர் ஆர். மணிகண்டன், முகமது இப்ராகிம், ராஜா,குமார் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் வி.பி.டி.வெங்கட்ராமன், ரியாஸ், நந்தகுமார், கோபி மற்றும் பல கலந்து கொண்டனர்.